உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 02, 2026 01:37 AM

அ நிறம் | அளவு
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையை பொறுத்தவரை கிட்டத்தட்ட 85 சதவீதம் இறக்குமதியிலிருந்து தான் கிடைக்கிறது.
இதில் பெரும்பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருவதால், அப்பகுதியில் நிலவும் பதற்றம், இந்திய பொருளாதாரத்துக்கும் பங்குச்சந்தைக்கும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், போர் முடிந்தாலும், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அடுத்த ஆறு மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது. எனவே, கச்சா எண்ணெய் சார்ந்திருக்கும் நிறுவன பங்குகளில் கூடுதல் எச்சரிக்கை தேவை. குறிப்பாக, பெயின்ட், டயர் மற்றும் லுாப்ரிகன்ட் நிறுவன பங்குகளில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என, 'ஐகுளோபல் ஆல்டர்நேட்' நிறுவனர் சி.கே.சிவராம் தெரிவித்துள்ளார்.
போர் முடிந்தாலும் கச்சா எண்ணெய் விலை உயர்வு அடுத்த 6 மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது
