உள்ளடக்கத்திற்கு செல்ல

யு.பி.ஐ., அசுர வளர்ச்சியால் டெபிட் கார்டு பயன்பாடு சரிவு ஆர்.பி.ஐ., வெளியிட்ட முக்கிய விபரங்கள்
யு.பி.ஐ., அசுர வளர்ச்சியால் டெபிட் கார்டு பயன்பாடு சரிவு ஆர்.பி.ஐ., வெளியிட்ட முக்கிய விபரங்கள்
ADDED : மே 21, 2026 12:30 AM

அ நிறம் | அளவு
நம் நாட்டு மக்கள் டெபிட் கார்டு பயன்படுத்துவதை கணிசமாக குறைத்து கொண்டு, யு.பி.ஐ., வாயிலாக பணபரிவர்த்தனை மேற்கொள்வது, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது.
2025ம் ஆண்டின் இரண்டாம் பாதியில், இந்தியாவில் நடந்த ஒட்டுமொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில், 85.50 சதவீத பங்குடன் யு.பி.ஐ., முதலிடத்தில் உள்ளது. தினசரி, டீக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை க்யூ.ஆர்., கோடு ஸ்கேன் செய்யும் வழக்கம் அசுர வேகத்தில் அதிகரித்துள்ளதே இதற்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
