கடன் பத்திரங்கள் : சிறு முதலீட்டாளர்களுக்கு சலுகை செபியின் முயற்சிக்கு வரவேற்பு கிடைக்குமா?
கடன் பத்திரங்கள் : சிறு முதலீட்டாளர்களுக்கு சலுகை செபியின் முயற்சிக்கு வரவேற்பு கிடைக்குமா?
ADDED : நவ 25, 2025 12:10 AM

கடன் பத்திரங்களை வெளியிடும் நிறுவனங்கள், மூத்த குடிமக்கள், பெண்கள், ராணுவ வீரர்கள் மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்கு சில சலுகைகளை வழங்கலாம் என செபி தெரிவித்துள்ளது. சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பை அதிகப்படுத்தவே இந்த யோசனையை முன்மொழிந்துள்ளதாக செபி கூறியுள்ளது.
இந்நிலையில், கடன் பத்திரங்களை எங்கு வாங்கி விற்பது; வட்டி எவ்வளவு கிடைக்கும்; இதில் உள்ள ரிஸ்க் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
எங்கு வாங்கலாம்?
*ரிசர்வ் வங்கியில் நேரடியாக கணக்கு துவங்கி, அரசு கடன் பத்திரங்களை வாங்கலாம்
*பொதுத் துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் வாங்கலாம்
*டிமேட், டிரேடிங் கணக்குகளை துவங்கி, கார்ப்பரேட் பாண்டுகளையும் வாங்கலாம்
*மியூச்சுவல் பண்டுகளில் டெப்ட் பண்டு அல்லது கில்ட் பண்டுகள் வாயிலாக வாங்கலாம்
l புதிதாக வெளியிடப்படும் கடன் பத்திரங்களை முதன்மை சந்தையில் வாங்கலாம்.
எப்படி விற்பது?
*என்.எஸ்.இ., அல்லது பி.எஸ்.இ., வாயிலாக விற்கலாம்
* முதிர்வு தேதிக்கு முன், அவற்றை வெளியிட்டவர்களிடம் திரும்ப விற்க முடியும்.
வட்டி விகிதம் என்ன?
*வட்டி விகிதம் நிலையாக இருக்காது
*அரசு கடன் பத்திரங்களுக்கு வட்டி விகிதம் குறைவு (பாதுகாப்பு சற்று அதிகம்)
*கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் பத்திரங்களுக்கு வட்டி அதிகம் (ஆபத்தும் சற்று அதிகம்)
* கிரெடிட் ரேடிங்கில் 'ஏ' மதிப்பீட்டுக்கு மேல் உள்ளவற்றை தேர்ந்தெடுக்கலாம்.
ரிஸ்க் என்ன?
*வெளியிட்டவர் வட்டி அல்லது அசலை திருப்பிச் செலுத்த முடியாமல் போவது
*சந்தை வட்டி கூடினால், பத்திரத்தின் மதிப்பு குறைவது.
முதிர்வுக்கு முன் வெளியேறினால் என்ன ஆகும்?
* சந்தையின் வட்டி விகிதங்களை பொறுத்து லாபமோ, நஷ்டமோ ஏற்படலாம்
*கடன் பத்திரங்களை சார்ந்த மியூச்சுவல் பண்டுகளில் வெளியேற கட்ட ணம் இருந்தால் செலுத்த நேரிடும்.

