தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ உலகளவில் சவால்கள் இருந்தாலும் இந்தியா 6.40% வளர்ச்சி பெறும் : ஐ.நா., ஆணையம் கணிப்பு

 உலகளவில் சவால்கள் இருந்தாலும் இந்தியா 6.40% வளர்ச்சி பெறும் : ஐ.நா., ஆணையம் கணிப்பு

 உலகளவில் சவால்கள் இருந்தாலும் இந்தியா 6.40% வளர்ச்சி பெறும் : ஐ.நா., ஆணையம் கணிப்பு


ADDED : ஏப் 22, 2026 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 04:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி, உலகளவில் சவால்கள் இருந்தாலும், இந்திய பொருளாதாரம் இந்த ஆண்டு 6.40 சதவீதம் வளர்ச்சி பெறும் என ஐ.நா.,வின் 'ஆசியா மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம்' கணித்துள்ளது.

ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசிய நாடுகளின் பொருளாதாரம் 2025ம் ஆண்டில் 5.40 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. இது, 2024ல் பதிவான 5.20 சதவீத வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாகும். இதற்கு, இந்தியாவின் வலுவான வளர்ச்சியே முக்கிய காரணமாக உள்ளது.

இந்திய பொருளாதார வளர்ச்சி 2025ல் 7.40 சதவீதமாக உள்ளது. கிராமப்புறங்களில் வலுவான நுகர்வு, ஜி.எஸ்.டி., வரி குறைப்புகள் மற்றும் அமெரிக்க இறக்குமதி வரி உயர்வுக்கு முன் ஏற்றுமதி அதிகரித்தது போன்றவை இதில் முக்கிய பங்கு வகித்தன.

இந்நிலையில், நடப்பு 2026ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.40 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அத்துடன், வரும் 2027ல் அந்நாட்டின் பொருளாதாரம் 6.60 சதவீதம் வளர்ச்சி அடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆசிய - பசிபிக் பிராந்திய நாடுகள் உலகின் பிற பகுதிகளை விட வேகமாக வளர்ச்சி பெற்று வந்தாலும், அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் உள்நாட்டு தொழில்களை பாதுகாப்பதற்காக வகுக்கப்படும் கடுமையான வர்த்தக கொள்கைகள் போன்றவை பிராந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'நிலைத்தன்மை தற்செயல் அல்ல' இ ந்திய பொருளாதாரத்தின் நிலைத்தன்மை தற்செயலாக உருவானது அல்ல. இதற்கு, பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், வலுவான கொள்கை அமைப்புகள் மற்றும் நம்பகமான அமைப்புகளே அடிப்படையாக உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு சராசரியாக 6.10 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. இது, உலக சராசரியான 3.20 சதவீதத்தை விடவும், சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகளை விடவும் அதிகம். இந்த வளர்ச்சிக்கு, ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ள சாதகமான சூழல் முக்கிய காரணமாக உள்ளது. - சஞ்சய் மல்ஹோத்ரா, கவர்னர், ரிசர்வ் வங்கி.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us