UPDATED : பிப் 27, 2026 07:52 AM
ADDED : பிப் 27, 2026 07:42 AM

கடந்த சில ஆண்டுகளாக அனல் பறந்த 'ஐ.பி.ஓ.,' சந்தை, நடப்பு ஆண்டில் திடீரென வேகம் குறைந்து காணப்படுகிறது. புதிய ஐ.பி.ஓ.,க்கள் சந்தைக்கு வருவது குறைந்தது மட்டுமின்றி சந்தையில் புதிதாக நுழைந்த நிறுவனங்களும் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கின்றன.
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 50 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் இதுவரை 'மெயின்போர்டு' மற்றும் 'எஸ்.எம்.இ.,' பிரிவு ஆகிய இரண்டிலும் சேர்த்து மொத்தம் 32 ஐ.பி.ஓ.,க்கள் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கின்றன. இதில், 11 நிறுவனங்களின் பங்குகள் தள்ளுபடி விலையிலும், 21 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடனும் பட்டியலாகி உள்ளன.
நடப்பாண்டில் பட்டியலான முதல் நாளில் ஈட்டிய சராசரி லாபம், ஒற்றை இலக்கத்துக்கு சுருங்கி, கிட்டத்தட்ட 8 சதவீதமாக குறைந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளை கேட்டு மட்டும் ஐ.பி.ஓ.,வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.

