ADDED : டிச 19, 2025 01:38 AM

'ஆபர் பார் சேல் அதிகரிப்பால் கவலை வேண்டாம்'
பு திய பங்கு வெளியீட்டில், ஆபர் பார் சேல் அதிகரித்து வருவது தொடர்பான கவலைகளை நிராகரிப்பதாக, செபி தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார். கடந்த 2024 ஏப். - அக்., மாதத்தில், புதிய பங்கு வெளியீட்டில் ஆபர் பார் சேல் பங்களிப்பு, 51 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பாண்டு இதே காலத்தில் 57 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கூறிய அவர், ஆரம்ப கட்ட முதலீட்டாளர்களுக்கு தங்கள் மூலதனத்தை எப்போது வேண்டுமானாலும், திரும்ப பெறுவதற்கான உரிமை உள்ளது என்றார்.
மியூச்சுவல் பண்டு நிறுவன பங்குகள் 7% உயர்வு
மி யூச்சுவல் பண்டு கட்டணங்கள் மாற்றத்துக்கு, செபி அனுமதி அளித்ததை தொடர்ந்து, நேற்றைய வர்த்தகத்தின் போது, ஹெச்.டி.எப்.சி., ஏ.எம்.சி., கனரா ரெபெக்கோ உள்ளிட்ட சொத்து மேலாண்மை நிறுவனங்களின் பங்குகள், 8.50 சதவீதம் அளவுக்கு உயர்வு கண்டன.
முடிவில், 7 சதவீத உயர்வுடன் நிறைவு செய்தன. மியூச்சுவல் பண்டு செலவுகள் விகிதம் குறித்த செபியின் முடிவு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுகுறித்து வெளியான அறிவிப்புகள் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களுக்கு நிம்மதியை அளித்துள்ளன.

