
வெள்ளி இ.டி.எப்., நிறுத்தியது ஐ.சி.ஐ.சி.ஐ
.,
'ஐ. சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் மியூச்சுவல் பண்டு' நிறுவனம், அதன் 'வெள்ளி இ.டி.எப்., பண்டு ஆப் பண்டு' திட்டத்தின் கீழ் புதிய சந்தாதாரர்களை சேர்ப்பதை, நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
டாடா மியூச்சுவல் பண்டு நிறுவனமும் இதே போன்ற அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. வெள்ளியின் கையிருப்பு பற்றாக்குறையால், உள்நாட்டில் அதன் விலை கடுமையாக அதிகரித்துள்ளதை காரணம் காட்டி, இந்நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே கோட்டக் மியூச்சுவல் பண்டு, எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு மற்றும் யு.டி.ஐ., மியூச்சுவல் பண்டு நிறுவனங்களும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
விரைவில் ஜப்பானிலும் யு.பி.ஐ.,
ஜ ப்பானில் யு.பி.ஐ., சேவையை அறிமுகப்படுத்தும் விதமாக, 'என்.பி.சி.ஐ., இன்டர்நேஷனல் பேமென்ட்ஸ்' நிறுவனம், ஜப்பானின் 'என்.டி.டி., டேட்டா' நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ஜப்பானில் யு.பி.ஐ., சேவை அறிமுகப்படுத்தப்பட்டதும், என்.டி.டி., டேட்டா நிறுவனத்துடன் தொடர்புடைய கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் கியூ.ஆர்., குறியீடு மற்றும் யு.பி.ஐ., செயலிகள் வாயிலாக, பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என்றும்; இதனால் இந்திய பயணிகள் அதிகம் பயனடைவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.