ADDED : அக் 06, 2025 10:48 PM

அ மெரிக்க வரி அழுத்தங்கள் மற்றும் அன்னிய முதலீடு வெளியேற்றம் காரணமாக, ரூபாய் சற்று பலவீனமாகவே உள்ளது. இருப்பினும், ரூபாய்க்கு சாதகமான சூழல் உருவாகிறது.
அமெரிக்க டாலர் மதிப்பு, சேவைகள் துறை வளர்ச்சி, கச்சா எண்ணெய் விலை ஆகியவை குறைந்துள்ளது, ரூபாய்க்கு சாதகமாக உள்ளது.
கத்தார் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் தருவாயில் உள்ளது. இது, இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக சூழலுக்கு ஊக்கம் அளிக்கும்.
தொழில்நுட்ப ரீதியாகப் பார்க்கையில், அமெரிக்க டாலர்/இந்திய ரூபாய் 89.00 - 89.20 என்ற அளவில் எதிர்ப்பை எதிர்கொள்கிறது. அதே நேரம் 88.40 - 88.50 என்ற அளவில் ஆதரவு நிலை உள்ளது. 88.20-க்கு கீழே ஒரு சரிவு ஏற்பட்டால், அது தற்போதைய போக்கு மாற்றத்திற்கான முதல் தெளிவான அறிகுறியாக இருக்கும்.
குறையும் டாலர் மதிப்பு, எண்ணெய் விலை மற்றும் நிலையான உள்நாட்டுச் சூழல் ஆகியவற்றால், ரூபாய்க்கு சாதகமான நிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒரு சிறிய உலகளாவிய தூண்டுதல் கூட, ரூபாயின் மதிப்பு மேலும் உயர்வதற்கு வழி வகுக்கும்.