தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ கரடியின் பிடி தளர்ந்தாலும், 'டிரெண்டு' பலவீனம் தான்

 கரடியின் பிடி தளர்ந்தாலும், 'டிரெண்டு' பலவீனம் தான்

 கரடியின் பிடி தளர்ந்தாலும், 'டிரெண்டு' பலவீனம் தான்


ADDED : மே 21, 2026 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 01:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

20-05-2026

நிப்டி

நேற்று 197 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி, கொஞ்சம் கொஞ்சமாக சரிவில் இருந்து மீண்டு இரண்டு மணிக்கு மேல் ஏற ஆரம்பித்தது. வர்த்தக இறுதியில் 41 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளில் 17 குறியீடுகள் ஏற்றத்துடனும், 1 குறியீடு இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப்100 ' குறியீடு குறைந்தபட்சமாக 0.04 சதவீதமும், 'நிப்டி மைக்ரோகேப்250' குறியீடு அதிகபட்சமாக 0.60 சதவீதமும் உயர்ந்தன. 'நிப்டி ஸ்மால்கேப்50' குறியீடு மட்டும் 0.15 சதவீத இறக்கத்துடன் நிறைவடைந்தது. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 13 குறியீடுகள் ஏற்றத்துடனும் 8 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

இவற்றில், 'நிப்டி ஆயில் அண்டு கேஸ்' குறியீடு அதிகபட்சமாக 1.59 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மீடியா' குறியீடு அதிகபட்சமாக 1.45 சதவீத இறக்கத்துடனும் காணப்பட்டன. வர்த்தகம் நடந்த 3,372 நிறுவனங்களின் பங்குகளில் 1,720 ஏற்றத்துடனும், 1,542 இறக்கத்துடனும், 110 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி குறுகிய மற்றும் நடுத்தர கால சராசரிகளுக்கு (இ.எம்.ஏ.,) கீழே பலவீனமான சைடுவேஸ் அமைப்பில் தொடர்கிறது.

மொமெண்டம் இண்டிகேட்டர்கள் (ஆர்.எஸ்.ஐ.,:45.64, எம்.ஏ.சி.டி.,: -87.50) பியரிஷ் அழுத்தம் சற்று குறைவதை காட்டுகின்றன. ஸ்டோக்காஸ்டிக் ஆசிலேட்டர் மேல்நோக்கி நகர்வது குறுகியகால அளவில் மீட்சிக்கு (புல்பேக்) வாய்ப்பு உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

உடனடி ரெசிஸ்டென்ஸ் 23,775 - 23,825 என்ற லெவலிலும், சப்போர்ட் 23,600 - 23,400 என்ற லெவலிலும் இருக்கிறது. 24,030ல் வலுவானதொரு ரெசிஸ்டென்ஸ் இருக்கிறது. மொத்தத்தில் நிப்டி குறுகிய காலத்தில் நியுட்ரல் முதல் மிதமான பாசிட்டிவ் என்ற அமைப்பில் வர்த்தகமாக வாய்ப்பு உள்ளதையே டெக்னிக்கல்கள் தற்போது காட்டுகின்றன.

ஆதரவு 23,475 23,285 23,180

தடுப்பு 23,770 23,875 23,990

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us