தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ வேகமான ஏஐ, வளர்ச்சிக்கு எதிர்ப்பு ஐடி, பங்குகள் விலை 5% உயர்வு

 வேகமான ஏஐ, வளர்ச்சிக்கு எதிர்ப்பு ஐடி, பங்குகள் விலை 5% உயர்வு

 வேகமான ஏஐ, வளர்ச்சிக்கு எதிர்ப்பு ஐடி, பங்குகள் விலை 5% உயர்வு


UPDATED : செப் 16, 2026 04:07 AM

ADDED : செப் 16, 2026 03:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 16, 2026 04:07 AM ADDED : செப் 16, 2026 03:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகளாவிய முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் நிர்வாகிகள், ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியை சற்றே குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் எதிரொலியாக, இந்திய பங்கு சந்தையில் நேற்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் அதிரடி ஏற்றம் கண்டன. இதனால் நிப்டி ஐ.டி., குறியீடு ஒரே நாளில் 5 சதவீதம் வரை அதிகரித்தது.

ஏ.ஐ., மாதிரிகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க அதன் வளர்ச்சி வேகத்தை குறைக்க வேண்டும் என 'ஆந்த்ரோபிக்' நிறுவன சி.இ.ஓ., டாரியோ அமோடி விடுத்த கோரிக்கையை, 'ஓபன் ஏ.ஐ.,' நிறுவன சி.இ.ஓ., சாம் ஆல்ட்மேன் மற்றும் எக்ஸ் ஏ.ஐ., நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோரும் ஏற்றுக்கொண்டனர். இதனால் அமெரிக்க சந்தையில் 'என்விடியா' போன்ற ஏ.ஐ., சார்ந்த சிப் நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.

ஐ.டி., பங்குகள் உயர்ந்தது ஏன்? ஏ.ஐ.,யின் வேகமான வளர்ச்சி காரணமாக பாரம்பரிய மென்பொருள் சேவைகளுக்கான தேவை குறைந்து வருவாய் பாதிக்கும் என்ற அச்சத்தால், கடந்த ஓராண்டாக இந்திய ஐ.டி., பங்குகள் சரிந்து வந்தன. தற்போது உலகளவில் ஏ.ஐ., வளர்ச்சி வேகம் கட்டுப்படும் என்பதால், அச்சுறுத்தல் தணிந்து முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

Image 1619704


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us