தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ எரிவாயு ஒழுங்குமுறை ஆணையால் உர நிறுவன பங்குகள் உயர்வு

 எரிவாயு ஒழுங்குமுறை ஆணையால் உர நிறுவன பங்குகள் உயர்வு

 எரிவாயு ஒழுங்குமுறை ஆணையால் உர நிறுவன பங்குகள் உயர்வு


ADDED : மார் 11, 2026 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 01:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ம த்திய அரசு வெளியிட்டுள்ள 'இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை ஆணை 2026' காரணமாக, நேற்றைய வர்த்தகத்தில் உர நிறுவனங்களின் பங்குகள் 20 சதவீதம் வரை உயர்ந்தன.

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தால் உலகின் மிகப்பெரிய எரிவாயு உற்பத்தியாளரான, 'கத்தார் எனர்ஜி' விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த உலகளாவிய எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும், உள்நாட்டு உர உற்பத்தியை உறுதி செய்யவும் மத்திய அரசு இந்த புதிய வினியோக முறையைக் கொண்டு வந்துள்ளது.

இதில், அரசு வழங்கிய எரிவாயுவை உரத் தயாரிப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது. உரத் தொழிற்சாலைகளுக்கு கடந்த 6 மாத கால சராசரி வினியோகத்தில் 70 சதவீதம் வரை எரிவாயு வழங்க இந்த ஆணை வழிவகை செய்கிறது.

அமோனியா மற்றும் யூரியா தயாரிப்புக்கு இயற்கை எரிவாயு மிக முக்கியமான மூலப்பொருளாக உள்ளதால், உர உற்பத்தி தடையின்றி நடக்கும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

உயர்வில் உர நிறுவன பங்குகள் (10.03.2026) நிறுவனம் பங்கு விலை (ரூ.) உயர்வு (%) பேக்ட்., 794.50 20.00% ஆர்.சி.எப்., 127.70 16.14% தீபக் பெர்டிலைசர்ஸ் 983.00 5.46% சம்பல் பெர்டிலைசர்ஸ் 431.70 4.72%



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us