ADDED : செப் 26, 2026 02:35 AM

'ஓலா எலக்ட்ரிக்' 10% வீழ்ச்சி
நா ன்கு நாள் தொடர் ஏற்றத்துக்கு பிறகு, 'ஓலா எலக்ட்ரிக்' பங்கு நேற்று 10 சதவீதம் வரை சரிந்தது. செப்டம்பர் 28ல் உரிமை பங்கு வெளியீடு வாயிலாக நிதி திரட்டுவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக நிறுவனம் அறிவித்ததை தொடர்ந்து இந்த சரிவு ஏற்பட்டதாக தெரிகிறது.
'அதானி பவர்' பங்கு 2% உயர்வு
'அ தானி பவர்' நிறுவனத்துடன் 10 துணை நிறுவனங்களை இணைப்பதற்கான திட்டத்துக்கு என்.சி.எல்.டி., ஒப்புதல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து, இந்நிறுவன பங்கு நேற்று 1.64 சதவீதம் உயர்ந்து 202.75 ரூபாயில் முடிந்தது.
'சுஸ்லான்' 3 மாதங்களில் 30% சரிவு
இ ந்தியாவில் காற்றாலை மின் திட்டங்களை புதுப்பிக்கும் வாய்ப்புகள் குறித்த தகவல்களுக்கு மத்தியில், 'சுஸ்லான் எனர்ஜி' பங்கு நேற்று 1 சதவீதத்துக்கும் மேல் சரிந்தது. கடந்த மூன்று மாதங்களில் இந்நிறுவன பங்கு 29.60 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
'நாட்கோ பார்மா' உரிமை பங்கு
உ ரிமை பங்கு வெளியீடு வாயிலாக 1,279 கோடி ரூபாய் திரட்ட ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, 'நாட்கோ பார்மா' பங்கு நேற்று ஏற்றம் கண்ட நிலையில், வர்த்தக முடிவில் 0.32 சதவீதம் குறைந்து 839.30 ரூபாயில் முடிந்தது. ஒரு உரிமை பங்கின் விலை 750 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள பங்குதாரர்களுக்கு 21 பங்குகளுக்கு இரு உரிமை பங்குகள் வழங்கப்பட உள்ளன.
