ADDED : டிச 20, 2025 01:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த 12ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 15,200 கோடி ரூபாய் அதிகரித்து 62 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு 9,297 கோடி ரூபாய் அதிகரித்திருந்தது. கையிருப்பில் முக்கிய பங்கு வகிக்கும் அன்னிய கரன்சி சொத்துக்களின் இருப்பு அதிகரித்ததே இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

