அரசு பத்திரங்களை விற்கும் அன்னிய முதலீட்டாளர்கள்
அரசு பத்திரங்களை விற்கும் அன்னிய முதலீட்டாளர்கள்
ADDED : ஏப் 04, 2026 02:45 AM

மே ற்கு ஆசிய நாடுகளிடையே நிலவும் போர் சூழல் காரணமாக, அன்னிய முதலீட்டாளர்கள் 17,689 கோடி ரூபாய் மதிப்பில், இந்திய அரசு பத்திரங்களை விற்பனை செய்துள்ளனர்.
வெளிநாட்டவர்கள் எந்த கட்டுப்பாடும் இன்றி எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யக்கூடிய எப்.ஏ.ஆர்., வகை அரசு பத்திரங்களில் இருந்து இந்த பணம் வெளியேறியுள்ளது, 'இந்திய கிளியரிங்க் கார்ப்பரேஷன்' வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது.
முதலீட்டாளர்கள் பத்திரங்களை விற்று வெளியேறுவதால், 10 ஆண்டு கால இந்திய அரசு பத்திரங்களின் வட்டி விகிதம் 7 சதவீதத்தை தாண்டியுள்ளது. இது கடந்த 20 மாதங்களில் இல்லாத உயர்வாகும். அடுத்த சில வாரங்களுக்கு இந்திய பத்திர சந்தையில் வட்டி விகிதம் 6.90 முதல் 7.20 சதவீதம் வரை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
10 ஆண்டு கால இந்திய அரசு பத்திரங்களின் வட்டி விகிதம் 7 சதவீதத்தை தாண்டியுள்ளது. இது கடந்த 20 மாதங்களில் இல்லாத உயர்வாகும்.
