ADDED : அக் 16, 2025 03:27 AM

இரண்டு வாரங்களாக மிகக் குறைந்த நிலையில் இருந்த இந்திய ரூபாய், புதன்கிழமை அன்று இறுதியாக ஒரு பெரிய ஏற்றம் கண்டது. 0.8% உயர்ந்து, அமெரிக்க டாலருக்கு எதிராக 88.08 என்ற அளவில் முடிந்தது. இது நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு சிறந்த ஒரு நாள் லாபம் ஆகும்.
'சுங்க வரிகளின் ராஜா' என இந்தியாவை, அமெரிக்கா அழைத்த நிலை மாறி வருகிறது. சீனாவுடனான வர்த்தகப் பதற்றங்கள் காரணமாக, இப்போது இந்தியாவிடம் இருந்தும் மற்ற நட்பு நாடுகளிடம் இருந்தும் அமெரிக்கா அதிக ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது.
இது உறவுகளைப் பலப்படுத்தி, ரூபாய்க்கு மேலும் பலம் சேர்க்கும்.
கச்சா எண்ணெய் விலை பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரலுக்கு 62 டாலர் என்ற அளவில் குறைந்தது. எண்ணெய் விலை குறைந்தது இந்திய ரூபாய்க்கு நல்ல விஷயமாகும்.
பெடரல் வட்டி விகிதம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல், இந்த மாதம் ஒரு வட்டி விகிதக் குறைப்புக்கு வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பால் உணர்த்தி உள்ளார். இந்த நிலைப்பாடு, அமெரிக்க டாலரின் உயர்வைத் தடுத்து, ரூபாய்க்கு சற்று நிம்மதியை அளிக்கிறது.
எதிர்பார்ப்பு ரூபாய் 88.40 என்ற முக்கியமான ஆதரவு நிலைக்குக் கீழே வந்திருப்பதால், தொடர்ந்து மதிப்பு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாயின் மதிப்பு 87.40--87.50 வரை உயர வாய்ப்புள்ளது. 88.40 -- -88.50 என்ற அளவில் தடை உள்ளது.