ADDED : ஏப் 18, 2026 12:28 AM

வாரத்தின் கடைசி நாளான நேற்று, இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் 93 என்ற நிலைக்கு கீழ் வந்து வலுவடைந்துள்ளது. போர் பதற்றம் குறைந்து வருவதும், ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கைகளுமே இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
'போர் விரைவில் முடிவுக்கு வரும்' என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ள கருத்தால், சந்தையில் நிலவிய பதற்றம் குறைந்து நிம்மதி திரும்பியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழ் நிலைகொண்டுள்ளது.
அமெரிக்காவின் தொழில் உற்பத்தி மார்ச் மாதத்தில் 0.50 சதவீதம் சரிந்ததால், டாலருக்கான தேவை குறைந்து ரூபாய்க்கு சாதகமாக மாறியுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் சந்தையில் நேரடியாக டாலரை வாங்குவதை கட்டுப்படுத்தி, ரூபாயின் மதிப்பை ரிசர்வ் வங்கி திறம்பட பாதுகாத்து வருகிறது. இருப்பினும், இந்த ஆண்டு மட்டும் ரூபாய் மதிப்பு 3 சதவீதத்துக்கும் மேல் சரிந்துள்ளது.
தற்போதைய சூழலில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 92.20 - 92.50 வரை வலுவடைய வாய்ப்புள்ளது. இருப்பினும், சர்வதேச சிக்கல்கள் முழுமையாக தீராத வரை, நீண்ட கால அடிப்படையில் ரூபாய் மதிப்பு 93.50 - 94.00 வரை மெல்ல சரியவும் வாய்ப்புள்ளது.
