தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/ஃபோரக்ஸ் : ஆர்.பி.ஐ., நடவடிக்கையால் ரூபாய் வலுவடைகிறது

ஃபோரக்ஸ் : ஆர்.பி.ஐ., நடவடிக்கையால் ரூபாய் வலுவடைகிறது

ஃபோரக்ஸ் : ஆர்.பி.ஐ., நடவடிக்கையால் ரூபாய் வலுவடைகிறது


UPDATED : ஜூன் 10, 2026 01:11 AM

ADDED : ஜூன் 10, 2026 01:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 10, 2026 01:11 AM ADDED : ஜூன் 10, 2026 01:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நேற்று 95.41 ரூபாயாக ஏற்றம் கண்டது. ரிசர்வ் வங்கியின் புதிய ஊக்க நடவடிக்கைகளும், உலகளாவிய பதற்றம் சற்றே தணிந்ததும் சந்தையில் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

அரசு கடன் பத்திர சந்தையில் அன்னிய முதலீட்டாளர்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, முழுமையாக அணுகக்கூடிய வழியை ரிசர்வ் வங்கி விரிவாக்கம் செய்துள்ளது.

ரிசர்வ் வங்கி எடுத்துள்ள இந்த நடவடிக்கைகள் உடனடியாக பலன் தராவிட்டாலும், நீண்டகால நோக்கில் 25 பில்லியன் முதல் 30 பில்லியன் டாலர் வரை கூடுதலாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image 1586080


ஈரான் - இஸ்ரேல் மோதல் தற்காலிகமாக ஓய்ந்ததால், கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்தியுள்ளது. கடந்த நிதியாண்டின் 4வது காலாண்டில் இந்தியா 7.10 பில்லியன் டாலர் உபரியை பெற்றிருப்பது, ஏற்றுமதி மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த வருவாயை காட்டுகிறது.

சாதகமான சூழல் நீடித்தால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு படிப்படியாக 94.80 - 95.00 வரையிலும், நீண்டகால நோக்கில் 94.00 - 93.80 என்ற வலுவான நிலையை நோக்கியும் முன்னேறக்கூடும். ஒருவேளை புதிய பதற்றங்கள் ஏற்பட்டால் ரூபாய் மதிப்பு 95.50 - 96.00 என்ற எல்லைக்குள் வர்த்தகமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us