யு.பி.ஐ., - ஐ.டி., மறந்துபோச்சா? மாற்று ஐ.டி.,க்கு ஒரு வழி இருக்கு!
யு.பி.ஐ., - ஐ.டி., மறந்துபோச்சா? மாற்று ஐ.டி.,க்கு ஒரு வழி இருக்கு!
UPDATED : அக் 12, 2025 04:12 AM
ADDED : அக் 12, 2025 03:59 AM

இப்போதெல்லாம் யு.பி.ஐ., வசதி இல்லையென்றால், எல்லோருக்கும் கை உடைந்தது போல் ஆகிவிடுகிறது. சிறிய தொகையோ, பெரிய தொகையோ, எந்தவொரு பண பரிமாற்றத்துக்கும், மொபைல் போனில் உள்ள யு.பி.ஐ., - ஐ.டி., தான் கைகொடுக்கிறது.
உங்கள் செயலியில் இன்னொரு வங்கி இணைக்கப்பட்டு இருந்தால், அதற்கு மாறி, பணத்தைக் கட்டிவிடலாம்.
பில் போட்டுவிட்டு பணத்துக்காக காத்திருக்கும் கடைக்காரர் முன்பு கையாலாகாதவர் போல் நிற்கவேண்டியது தான். இந்தச் சிரமத்தை குறைப்பதாகவே, 'பேக்அப் யு.பி.ஐ. ஐ.டி.,' என்ற மாற்று வழி ஒன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதன்படி, பயனர் ஏற்கனவே வைத்துள்ள ஐ.டி.,யோடு கூடுதலாக அதே வங்கியில் பேக் அப்பை உருவாக்கிக்கொள்ள முடியும்.
உதாரணமாக, ஒருவரது யு.பி.ஐ., - ஐ.டி., சங்கீத்@யு.பி.ஐ., என்று இருப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது அதே வங்கியில் சங்கீத்123@யு.பி.ஐ., என்று புதிதாக ஒரு ஐ.டி.,யை உருவாக்கினால் போதும்.
ஒருவேளை முதல் ஐ.டி., ஏதோ ஒரு காரணத்தினால் இயங்கவில்லை என்றால், யு.பி.ஐ., அமைப்பே, இரண்டாவது ஐ.டி.,யை எடுத்துக்கொண்டு, அதன் வாயிலாக பணம் செலுத்திவிடும்.
இதனால், நிம்மதிக்கு நிம்மதி. சவுகரியத்துக்குச் சவுகரியம்.
எப்படி மாற்று ஐ.டி.யை உருவாக்குவது?