ADDED : ஜூன் 15, 2026 02:04 AM

இந்திய பங்கு சந்தையில் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்களின் விற்பனை வேட்டை ஓயவே இல்லை. ஜூன் மாதத்தின் முதல் 14 நாட்களிலேயே இந்திய பங்கு சந்தைகளில் இருந்து 62,853 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர்.
என்.எஸ்.டி.எல்., தரவுகளின்படி, 2026ம் ஆண்டில் இதுவரை மட்டும் மொத்தம் 2.87 லட்சம் கோடி ரூபாய் இந்திய பங்குகளில் இருந்து வெளியேறியுள்ளது.
இது, கடந்த 2025 முழு ஆண்டிலும் வெளியேறிய 1.66 லட்சம் கோடி ரூபாயை விட அதிகம். பிப்ரவரி மாதத்தை தவிர (ரூ.22,615 கோடி முதலீடு), நடப்பு ஆண்டின் ஒவ்வொரு மாதமும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிகர விற்பனையாளர்களாக இருந்துள்ளனர்.
வங்கி மற்றும் நிதி சேவை துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த பங்குகளை அவர்கள் அதிகம் விற்றிருப்பதாக தெரிகிறது.
முக்கிய 3 காரணங்கள்
1. மேற்கு ஆசிய நாடுகளில் நீடிக்கும் போர் பதற்றம்
2. ரூபாயின் கடும் வீழ்ச்சி
3. உலகளாவிய பொருளாதார மந்தநிலை.
