தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ சமையல் எண்ணெய் முதல் ஐ.டி., சாம்ராஜ்யம் வரை

 சமையல் எண்ணெய் முதல் ஐ.டி., சாம்ராஜ்யம் வரை

 சமையல் எண்ணெய் முதல் ஐ.டி., சாம்ராஜ்யம் வரை


ADDED : மே 24, 2026 12:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2026 12:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரை மையமாக கொண்ட விப்ரோ, இந்தியாவின் 'பிக் சிக்ஸ்' முன்னணி ஐ.டி., நிறுவனங்களில் ஒன்றாகும். இது, 1945ல் 'அமல்னெர்' நகரில் எம்.எச். ஹாஷம் பிரேம்ஜியால் சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனமாக தொடங்கப்பட்டது.

பின்னர், 1980களில் கணினி துறையில் நுழைந்து, 'விப்ரோ இன்போடெக் மற்றும் விப்ரோ சிஸ்டம்ஸ்' என உருவெடுத்தது. 1984ல், 'ஸ்பரட்ஷீட்' தயாரிப்புகள் வாயிலாக ஐ.டி., சேவையை தொடங்கி, 1990ல் வெளிநாட்டு சாப்ட்வேர் மேம்பாட்டு துறையிலும் தடம் பதித்தது.

தற்போது, டி.சி.எஸ்., இன்போசிஸ், ஹெச்.சி.எல்., டெக்னாலஜிஸ் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் நான்காவது பெரிய ஐ.டி., நிறுவனமாக உள்ளது.

விப்ரோ நிறுவனம் 2026 நிதியாண்டில், 10.50 பில்லியன் டாலர் (ரூ.92,624 கோடி) வருவாயை ஈட்டியுள்ளது. 2,42,156 பணியாளர்களை கொண்டுள்ள இந்நிறுவனத்தின் பணியாளர் விலகல் விகிதம் 13.80 சதவீதமாக உள்ளது.

சி.ஏ.ஜி.ஆர்., வளர்ச்சி 2015 - 2020 நிதியாண்டுகளுக்கு இடைப்பட்ட 5 ஆண்டுகளில், விப்ரோ போட்டி நிறுவனங்களை விட பின்தங்கி மிதமான வளர்ச்சியை மட்டுமே கண்டது. இக்காலகட்டத்தில் அதன் சி.ஏ.ஜி.ஆர்., வளர்ச்சி 3.40 சதவீதமாக இருந்தது.

இது, நிதியாண்டுகளின்படி 2017ல் 2.80%லிருந்து 2020ல் 1.60% ஆக சரிந்தது. இருப்பினும், 2 போனஸ் இஷ்யூக்கள் மற்றும் 3 ஷேர் பைபேக்குகள் வாயிலாக ரூ.25,000 கோடியை பங்குதாரர்களுக்கு வழங்கியது.

கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் விப்ரோ வேகம் கண்டது; 2022 நிதியாண்டில் வருவாய் 10.40 பில்லியன் டாலரைக் கடந்தது. ஆலோசனை பிரிவு வாயிலாக, பெரும் தொழில்நுட்ப திட்டங்களை பெற்றது. இக்காலகட்டத்தில் 'கேப்கோ' நிறுவனத்தை 1.45 பில்லியன் டாலருக்கு கையகப்படுத்தி, பி.எப்.எஸ்.ஐ., துறையை வலுப்படுத்தியது.

இருப்பினும், ஊழியர்கள் அலுவலகம் திரும்பியதால் பயண மற்றும் செயல்பாட்டு செலவுகள் அதிகரித்து, 2021ல் 20.30 சதவீதமாக இருந்த செயல்பாட்டு லாப வரம்பு, 2023ல் 15.70 சதவீதமாக குறைந்தது.

நீடித்த மந்தநிலை 2024 -- 26 நிதியாண்டுகளில், விப்ரோ நிறுவனம் வலுவான ஒப்பந்தங்களை பெற்ற போதிலும், வருவாயில் ஏற்பட்ட தொடர் சரிவு காரணமாக நீண்ட கால வருவாய் அழுத்தத்தை எதிர்கொண்டது.

நிறுவனத்தின் ஐ.டி., சேவைகள் வருவாய் 2024ல் 4.40 சதவீதமும், 2025ல் 2.30 சதவீதமும், 2026ல் 1.60 சதவீதமும் சரிவை கண்டது. சந்தையில் நிலவிய கடுமையான மந்தநிலையே இந்த தொடர் சரிவுக்கு காரணம்.

குறிப்பாக, சில குறிப்பிட்ட வாடிக்கையாளர் சார்ந்த சிக்கல்கள் மற்றும் விப்ரோவின் மொத்த வருவாயில் 34 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள பெரிய பி.எப்.எஸ்.ஐ., கணக்குகளில் புதிய திட்டப்பணிகள் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதமே இந்த வீழ்ச்சிக்கு காரணங்களாக அமைந்தன.

உலகளாவிய பொருளாதார சூழலால் வாடிக்கையாளர்கள் கூர்ந்து கவனித்து முடிவெடுக்கும் அணுகுமுறையை கையாண்டனர். குறிப்பாக, முக்கிய 'எஸ்.ஏ.பி.,' திட்டப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதால், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வருவாயில் பெரும் சரிவு ஏற்பட்டது.

வலுவான ஒப்பந்தங்கள் வருவாய் சரிந்த போதிலும், 2026ம் நிதியாண்டின் 4வது காலாண்டில் விப்ரோவின் ஒட்டுமொத்த ஒப்பந்தங்கள் 15 சதவீதம் அதிகரித்தன.

ஒப்பந்தங்கள், 'டிஜிட்டல் மாற்றங்களில்' இருந்து செலவு குறைப்பு மற்றும் விற்பனையாளர் ஒருங்கிணைப்பு நோக்கி மாறின. இவ்வகை ஒப்பந்தங்களின் பங்களிப்பு 21 சதவீதத்திலிருந்து (2023 நிதியாண்டு) 48 சதவீதமாக (2026, 4வது காலாண்டு) உயர்ந்தது.

இருப்பினும், உலகளாவிய பொருளாதார சூழலால் வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்ப செலவுகளை குறைத்ததாலும், பெரிய ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வர நீண்ட காலம் எடுத்ததாலும் புதிய ஒப்பந்தங்கள் உடனடியாக வருவாயாக மாறவில்லை.

லாப வரம்பு உள் ஒப்பந்த செலவு குறைப்பு மற்றும் ஊழியர் பயன்பாட்டு விகித அதிகரிப்பால் விப்ரோ தன் இ.பி.ஐ.டி., லாப வரம்பை நிலையாக தக்கவைத்தது. இதனால், செயல்பாட்டு லாப வரம்பு 16.10 சதவீதத்திலிருந்து (2023-2024 நிதியாண்டு) 17.20 சதவீதமாக (2025-2026) உயர்ந்தது.

மேலும், ஒரு பங்கிற்கான வருவாயை (இ.பி.எஸ்.,) பாதுகாக்கும் நோக்கில், ஒரு பங்கிற்கு 250 ரூபாய் வீதம், தன் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் 'பைபேக்' செய்ய விப்ரோவின் நிர்வாக வாரியம் ஒப்புதல் அளித்தது.

ஏ.ஐ., தொழில்நுட்பம் விப்ரோ நிறுவனம் ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் ஏற்படும் உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் வருவாய் சுருக்க சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

பாரம்பரிய சேவை மாதிரியிலிருந்து சாப்ட்வேர் வடிவிலான சேவைக்கு மாறுவதற்காக, 'ஏ.ஐ., நேட்டிவ் வணிகம் மற்றும் பிளாட்பாம்கள் என்ற பிரத்யேக பிரிவை நிறுவனம் தொடங்கியுள்ளது.

உலகளாவிய பொருளாதார சூழலால் வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவதால், புதிய ஏ.ஐ., திட்டங்கள் முழு வேகத்தில் தொடங்குவதில் ஏற்படும் தற்காலிக தாமதங்களை விப்ரோ கையாள வேண்டியுள்ளது.

எதிர்கால கண்ணோட்டம் போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் விப்ரோ சுமாரான செயல்பாட்டையே வெளிப்படுத்தியுள்ளது. பொருளாதார நிச்சயமற்ற சூழல் மற்றும் ஏ.ஐ., தொழில்நுட்ப சவால்களால், சிறந்த வளர்ச்சியை வழங்குவது விப்ரோவிற்கு கடினமாக இருக்கலாம்.

இது, அதன் ஐடி பிரிவு முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் வெறும் -2% முதல் 0% வரையிலான வளர்ச்சியை மட்டுமே கணித்துள்ளதை 2027 நிதியாண்டின் முதல் காலாண்டு முன்முடிவுகள் பிரதிபலிக்கின்றன.

தற்போது விப்ரோ பங்குகள், அதன் 10 ஆண்டுகால சராசரி பி/இ., விகிதமான 19 மடங்கை விட குறைவாக, 16 மடங்கு பி/இ., விகிதத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

நடப்பு 2026ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இப்பங்குகளின் மதிப்பு 25 சதவீதம் சரிவை கண்டுள்ள போதிலும், மந்தமான உலகளாவிய சூழல் மற்றும் கடுமையான போட்டி காரணமாக, முதலீட்டாளர்கள் குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பொறுப்பு, துறப்பு இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல. நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம், வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us