தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஃபண்டு முதலீடு: சிறு நகரங்களை கலக்கும் எஸ்.ஐ.எப்.,

ஃபண்டு முதலீடு: சிறு நகரங்களை கலக்கும் எஸ்.ஐ.எப்.,

ஃபண்டு முதலீடு: சிறு நகரங்களை கலக்கும் எஸ்.ஐ.எப்.,


ADDED : மே 04, 2026 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2026 01:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செபி சமீபத்தில் அறிமுகப்படுத்திய எஸ்.ஐ.எப்., எனும் 'ஸ்பெஷலைஸ்டு இன்வெஸ்ட்மென்ட் பண்டு'கள் சிறு நகரங்களிலும் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் எஸ்.ஐ.எப்., முதலீட்டு வகை அறிமுகப்படுத்தப்பட்டது. இது, பாரம்பரிய மியூச்சுவல் பண்டுகளின் வரி சலுகைகளையும், பி.எம்.எஸ்., எனும் 'போர்ட்போலியோ மேனேஜ்மென்ட் சர்வீசஸ்' திட்டங்களில் காணப்படும் முதலீட்டு நெகிழ்வுத்தன்மையையும் ஒருங்கே வழங்கும் ஒரு புதிய வகை முதலீட்டு முறையாகும்.

அதாவது, சந்தை உயரும்போது மட்டுமே லாபம் தரும் வழக்கமான பண்டுகளை போலல்லாமல், சந்தை வீழ்ச்சியடையும் நேரங்களிலும் லாபம் ஈட்டக்கூடிய, 'லாங் - ஷார்ட்' போன்ற மாறும் சூழலுக்கு ஏற்ப செயல்படும் உத்திகளை பயன்படுத்துவது இதன் சிறப்பம்சமாகும்.

எல்லா தரப்பு முதலீட்டாளர்களும் முதலீடு செய்வதற்கு மியூச்சுவல் பண்டுகள் இருக்கின்றன. அதற்கு அடுத்தபடியாக, பி.எம்.எஸ்., பண்டுகள் இருந்தாலும், அதில் முதலீடு செய்வதற்கு குறைந்தப ட்சம் 50 லட்சம் ரூபாய் தேவை.

எனவே, மியூச்சுவல் பண்டுகளுக்கும், பி.எம்.எஸ்., பண்டுகளுக்கும் இடையே உள்ள முதலீட்டு இடைவெளியை நிரப்புவதற்காக, எஸ்.ஐ.எப்., பண்டுகள் என்ற புதிய சொத்து வகையை செபி அறிமுகப்படுத்தியது.

மியூச்சுவல் பண்டுகளை விட சற்று கூடுதல் 'ரிஸ்க்' எடுத்து முதலீடு செய்ய விரும்புவோருக்காக எஸ்.ஐ.எப்., கொண்டுவரப்பட்டது. எஸ்.ஐ.எப்., பண்டுகளில் முதலீடு செய்வதற்கு குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் தேவை.

* முதலீட்டு உலகில், இந்தியாவின் முதல் 30 நகரங்களை தவிர பிற நகரங்கள் அனைத்தும் சிறு நகரங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன

* அந்த வகையில், எஸ்.ஐ.எப்., பண்டு முதலீட்டாளர்களில் 30 சதவீதத்தினர் சிறு நகரங்களை சேர்ந்தவர்கள்தான்

* மியூச்சுவல் பண்டுகளிலேயே சிறு நகரங்களை சேர்ந்த முதலீட்டாளர்களின் பங்கு 20 சதவீதம்தான்

* எஸ்.ஐ.எப்., பண்டுகளால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, 2025 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 2026 மார்ச் மாதத்தில் கிட்டத்தட்ட 117 சதவீதம் உயர்ந்துள்ளது

* வரும் ஆண்டுகளில், எஸ்.ஐ.எப்., பண்டுகளின் வளர்ச்சி இன்னும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு
2025 டிசம்பர் ரூ.4,892. 32 கோடி
2026 மார்ச் ரூ.10,620. 45 கோடி
ஆதாரம்: ஆம்பி



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us