தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஃபண்டமென்டல் அனாலிசிஸ்: போட்டிகளை மீறி பளிச்சிடுகிறது 'ஏசியன் பெயின்ட்ஸ்'

ஃபண்டமென்டல் அனாலிசிஸ்: போட்டிகளை மீறி பளிச்சிடுகிறது 'ஏசியன் பெயின்ட்ஸ்'

ஃபண்டமென்டல் அனாலிசிஸ்: போட்டிகளை மீறி பளிச்சிடுகிறது 'ஏசியன் பெயின்ட்ஸ்'


UPDATED : நவ 30, 2025 12:25 AM

ADDED : நவ 30, 2025 12:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 30, 2025 12:25 AM ADDED : நவ 30, 2025 12:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவின் ஒட்டுமொத்த பெயின்ட் சந்தையில், 52 சதவீத பங்களிப்புடன் 'ஏசியன் பெயின்ட்ஸ்' நிறுவனம் முன்னணியில் உள்ளது. பெயின்ட் உற்பத்தி மட்டுமல்லாமல், 'இண்டஸ்ட்ரியல், வாட்டர் புரூபிங்க், ஹோம் டெக்கர்' ஆகிய வணிக பிரிவுகளிலும் இந்நிறுவனம் இயங்கி வருகிறது.

Image 1501707


காலாண்டு முடிவுகள்


பருவகால மழை பாதிப்பு இருந்தபோதிலும், 2025-- - 26 நிதியாண்டு இரண்டாவது டெக்கேரட்டிவ் வணிகப் பிரிவின் விற்பனை 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

தேவை மிதமாக இருந்தபோதிலும், நிறுவனத்தின் முயற்சியால், இந்த துறையின் மற்ற நிறுவனங்களை விட சிறந்த செயல்பாட்டை வழங்கியுள்ளது.

மேலும் நிறுவனத்தின் பொருட்களின் விலை, 6 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் மொத்த மார்ஜின், 270 புள்ளிகள் அதிகரித்து 43.7 சதவீதமாக உள்ளது.

மூலப்பொருள் விலை குறைவு காரணமாக, இ.பி.ஐ.டி.டி.ஏ., மார்ஜின் 18.50 சதவீதமாக உள்ளது. மேலும், சர்வதேச தொழிலும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. 'இண்ட்ஸ்ட்ரியல் கோட்டிங்' 2 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. மேலும் 18 -- 20 சதவீத மார்ஜினை நிலையாக வைத்துள்ளது.

ஐந்து முக்கிய உத்திகள்

செப்டம்பர் காலாண்டுக்குப் பின், நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துள்ளது.

1. பிராண்டு கட்டமைப்பு பிராண்டு செலவுகளை அதிகரித்துள்ளது. 'ராயல் ஹில்ட்ஸ், ஹர் கர் குச் கேத்தா ஹை' போன்ற விளம்பரங்கள், வீட்டுரிமை மற்றும் இலக்குகளை மையப்படுத்தி அமைந்தன. மேலும், விளையாட்டு நிகழ்ச்சிகளில் குறிப்பாக, ஏசியா கப், இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் போன்றவற்றில் நிகழ்வுகளில் பங்கேற்று பிராண்டை நிறுவனம் வலுப்படுத்தியது.

2.விலை பிரிவில் புதுமை

பிரீமியம் மற்றும் மாஸ் செக்மென்ட்கள் முழுவதும், புதுமையான விஷயங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. புதிய வாட்டர் புரூபிங் தயாரிப்புகள்

-டிராக்டர் ஸ்பார்க் போன்ற மலிவான ஸ்மார்ட் பினிஷ்கள், -புதிய குரோம் மற்றும் மெட்டாலிக்வுட் பினிஷ்கள் போன்ற புதிய தயாரிப்புகள் தற்போது, வருவாயில் 15 சதவீத பங்களிப்பை செய்து வருகின்றன. இது முக்கிய உத்தியாக இருக்கிறது.

3.மாறுபட்ட சேவைகள்

வாடிக்கையாளர் பயணத்தில் சேவை என்பது மிக முக்கிய கருவாக மாறிவிட்டது. பெயின்ட் சேவை, தற்போது 650க்கும் மேற்பட்ட நகரங்களை சென்றடைந்துள்ளது.

செயற்கை தொழில்நுட்பம் இந்த சேவையின் தரத்தை மேம்படுத்தி வருகிறது. டோட்டல் அஸ்யூர் மற்றும் மெட்டாகேர் திட்டங்கள் கட்டுமானர்கள், தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு சங்கங்களுக்கு முழுமையான தீர்வுகளை வழங்குகின்றன.

இதன் வாயிலாக கான்ட்ராக்டர்களுடன் தொடர்பை ஆழப்படுத்தவும், தேவையை அதிகப்படுத்தவும் உதவுகிறது.

4.பிராந்தியப்படுத்துதல்

இந்நிறுவனம் இந்த ஆண்டு செய்த மிகப்பெரிய மாற்றங்களுள் ஒன்று, செயல்பாடுகளை பிராந்திய அளவில் ஏற்படுத்தியது. அதாவது ஒட்டுமொத்த சந்தையாக இயங்காமல், தனித்தனி மைக்ரோ சந்தைகளாக இந்தியா முழுதும் செயல்படுவது.

உதாரணமாக பிராந்திய அளவில் அவர்களது கலாசாரத்துக்கு ஏற்ப தயாரிப்புகளை கொண்டு வந்தது.

5.பி2பி., விரிவுபடுத்தல்

நிறுவனம் தனது பி2பி., கவனத்தை கட்டுமான துறையைக் கடந்தும் விரிவுபடுத்தியுள்ளது. அரசு, தொழிற்சாலைகள், உள்கட்டமைப்பு திட்டங்கள், மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி துறைகள் தற்போது முக்கிய வாடிக்கையாளர்களாக உள்ளன.

வீட்டு அலங்காரம்

வீட்டு அலங்காரப் பொருட்கள் தற்போது சிறிய அளவில் இருந்தாலும், மிக முக்கியமானவை. 'பியூட்டிபுல் ஹோம்ஸ்' ஸ்டோர்கள் 73 ஆக உயர்ந்துள்ளன. புதிய கிச்சன் மற்றும் வார்ட்ரோப் தயாரிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கிச்சன் மற்றும் பாத் பிரிவுகளில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், வருவாய் குறைவு காணப்பட்டது. வெதர்சீல் நல்ல செயல் திறனைக் காட்டியது.

போட்டி மற்றும் சந்தை

தற்போது நிர்வாகம் கடுமையான போட்டியை சந்தித்து வந்தாலும், கட்டமைப்பு சார்ந்த எந்த இழப்புகளும் நிறுவனத்துக்கு இல்லை. -போட்டியாளர்கள் வழங்கும் இலவச திட்டங்கள் நிலைத்திருக்கக்கூடியவை அல்ல.

-டீலர் உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. -இன்டீரியர் பிரிவுகளில் நிறுவனம் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறது; எக்ஸ்டீரியர் பிரிவுகள் மழைக்காலத்தின் தாக்கத்தால் சற்று பாதிக்கப்பட்டது.

பிராண்டு, டீலர் உறவுகள், செயல்படுத்தும் திறன் போன்ற முக்கிய வலிமைகள், நிறுவனத்திடம் இன்னும் உறுதியாக உள்ளன

எதிர்காலம்


ஆறு மிதமான காலாண்டுகளுக்குப் பின், நிறுவனம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது. துரிதமான, உத்திகள் நிறைந்த தொலைநோக்கு திட்டங்கள், நீண்டகால வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை அமைக்கின்றன. ஏசியன் பெயின்ட்ஸ் இன்னும் இந்தப் பிரிவின் முன்னணி நிறுவனமாக தொடர்ந்து உள்ளது. வால்யூம்கள் மீண்டு வருகின்றன. மார்ஜின்கள் நிலையானதாக உள்ளன. நிறுவனங்களுக்கிடையே போட்டித்தன்மை இருக்கிறது. ஆனால், பிராண்டு, டீலர் உறவுகள், செயல்படுத்தும் திறன் போன்ற முக்கிய வலிமைகள், நிறுவனத்திடம் இன்னும் உறுதியாக உள்ளன.

பொறுப்பு அறிவிப்பு

இந்த அறிக்கை முதலீட்டு பரிந்துரை அல்ல.

நாங்களோ எங்கள் வாடிக்கையாளர்களோ இந்த பங்குகளை வைத்திருக்கலாம்; வாங்கிக்கொண்டு இருக்கலாம் அல்லது விற்றுக்கொண்டு இருக்கலாம் என்பதை உங்கள் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

- ஷ்யாம் சேகர்,

ஐதாட்பிஎம்எஸ்

பங்கு ஆய்வு குழு

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us