தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : ஏ.ஐ., தொழில்நுட்பத்துக்கு முன்னுரிமை அளிக்கும் 'இன்போசிஸ்'

ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : ஏ.ஐ., தொழில்நுட்பத்துக்கு முன்னுரிமை அளிக்கும் 'இன்போசிஸ்'

ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : ஏ.ஐ., தொழில்நுட்பத்துக்கு முன்னுரிமை அளிக்கும் 'இன்போசிஸ்'


UPDATED : நவ 29, 2026 02:27 AM

ADDED : நவ 28, 2026 09:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 02:27 AM ADDED : நவ 28, 2026 09:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

' இ ன்போசிஸ்' நாட்டின் 2வது மிகப்பெரிய ஐ.டி., நிறுவனமாக உள்ளது. இதற்கு, 200க்கும் மேற்பட்ட 'பார்ச்சூன் 500' நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளன. கடந்த 2025-26ம் நிதியாண்டில் இந்நிறுவனம் 20 பில்லியன் டாலர் (ரூ.1,78,650 கோடி) வருவாய் ஈட்டியுள்ளது. மேலும், உலகம் முழுவதும் இந்நிறுவனத்தில் 3.28 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர்.

செயல்பாடு

 2019-20 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில், வருவாய் ரூபாய் மதிப்பில் 11.90 சதவீதம் (சி.ஏ.ஜி.ஆர்.,) அதிகரித்துள்ளது

 டிஜிட்டல் தளங்கள், சுயசேவை தயாரிப்புகள் மற்றும் நிறுவனங்களின் உட்கட்டமைப்பு மாற்றங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள், வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக அமைந்தன

 டேட்டா மற்றும் அனலிட்டிக்ஸ், கிளவுட் உள்கட்டமைப்பு மற்றும் வணிக செயல்பாடுகளை, முழுமையான டிஜிட்டல் திறன்களாக மாற்றுவதில் கவனம் செலுத்தியது

 அமெரிக்க சந்தையை மையமாக கொண்ட நிதிச்சேவைகள் துறை, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்தது

 ஆட்டோமொபைல், விண்வெளி மற்றும் தொழில்துறை பிரிவுகளில் சந்தை பங்கை அதிகரித்து கொண்டது

 நிறுவனத்தின் செயல்பாட்டு லாப வரம்பு 21.30 சதவீதத்திலிருந்து 2021-22ம் நிதியாண்டில் உச்சபட்சமாக 23 சதவீதத்தை எட்டியது

 ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிந்ததால், நிறுவனம் அவர்களை மிக அதிகளவில் பயன்படுத்தியது. பயிற்சியாளர்கள் தவிர, ஊழியர்களின் பணி பயன்பாட்டு விகிதம் 84.70- 86% என்ற உச்சத்தை எட்டியது.

சவால்கள்

 2024-25: அதிக பணவீக்கம், உச்சகட்ட வட்டி விகிதங்கள், முக்கிய நாடுகளின் தேர்தல்கள் மற்றும் புவிசார் அரசியல் மோதல்களுக்கு மத்தியில், வாடிக்கையாளர்கள் செலவுகளை குறைத்தனர். புதிய மெகா ஒப்பந்தங்களின் ஆரம்பகட்ட செலவுகள் லாப வரம்பை பாதித்தன

 2025-26: நிறுவனம் டாலர் மதிப்பில் 5% வளர்ச்சியை பதிவு செய்தது. பெரிய ஒப்பந்தங்கள், ஏ.ஐ., சார்ந்த மாற்றங்கள் மற்றும் பழைய தொழில்நுட்பங்களை நவீனமயமாக்குதல் ஆகியவற்றால் நிதி சேவைகள் துறை 4% வளர்ந்தது.

 2026-27: பெரிய ஒப்பந்தங்களின் மதிப்பு அதிகரித்த போதிலும், வருவாய் வளர்ச்சி 1.5% முதல் 3.5% வரை மட்டுமே இருக்கும் என இன்போசிஸ் கணித்துள்ளது.

ஏ.ஐ., தாக்கம்

 ஏ.ஐ.,க்கு முன்னுரிமை அளிக்கும் சேவைகள் மற்றும் தளங்களின் தொகுப்பாக 'இன்போசிஸ் டோபாஸ்' கடந்த 2023ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது

 பாரம்பரிய ஐ.டி., சேவைகளிலிருந்து ஏ.ஐ.,க்கு மாறுவது 'ஏ.ஐ., ரீசெட்' என அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக பணியாளர்களின் உழைப்பை அடிப்படையாக கொண்டிருந்த இத்துறை, தற்போது விளைவுகள் மற்றும் ஏ.ஐ.,யை நோக்கி நகர்கிறது

 ஏ.ஐ.,யால் ஏற்படும் உற்பத்தித்திறனால், பாரம்பரிய உழைப்பு சார்ந்த சேவைகளில் ஆண்டுக்கு 2-3% வரை விலை சரிவு ஏற்படும் என நிறுவனங்கள் கணிக்கின்றன. ஐ.டி., நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு குறைந்திருப்பதற்கு இதுவே முக்கிய காரணமாகும்

 நிறுவனங்களில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை செயல்படுத்தும்போது, வாடிக்கையாளர் உற்பத்தித்திறன் அதிகரிப்பதை இன்போசிஸ் கண்டறிந்துள்ளது

 ஏ.ஐ., உட்கட்டமைப்பு மீதான முதலீடுகள் உச்சத்தை எட்ட தொடங்கியுள்ளதால், இனிவரும் காலங்களில் முதலீடுகள் 'ஏ.ஐ., பயன்பாட்டு தளத்திற்கு' மாற உள்ளன. அப்போதுதான் ஐ.டி., நிறுவனங் களுக்கான அடுத்தகட்ட வளர்ச்சி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



எதிர்காலம்

 வளர்ச்சி வாய்ப்பு: 'டி.சி.எஸ்., ஹெ.ச்.சி.எல்., டெக்' நிறுவனங்களை விட, விருப்ப செலவின பணிகளை அதிகம் நம்பியுள்ள இன்போசிஸுக்கு, சேவை துறைக்கு ஏ.ஐ., முதலீடுகள் திரும்பும்போது கூடுதல் பலன் கிடைக்கும்

 குறைந்த மதிப்பு: 12 மாத வருவாயில் 15 மடங்கு என்ற மதிப்பில் வர்த்தகமாகும் இப்பங்கு, சக நிறுவனங்கள் மற்றும் தன் பழைய சராசரியை விட குறைவான விலையில் உள்ளது

 மறுமதிப்பீடு: இந்திய மற்றும் உலகளாவிய போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், இப்பங்கின் மதிப்பு கவர்ச்சிகரமாக உள்ளதால் எதிர்காலத்தில் மறுமதிப்பீடு செய்யப்பட வாய்ப்புள்ளது

 புதிய தலைமை: 2028ம் நிதியாண்டில் பொறுப்பேற்கும் புதிய சி.இ.ஓ., அஷிஸ் குமாரின் திட்டங்களை முதலீட்டாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.



ஜூலை - செப்., செயல்பாடு



வருவாய்

1.20%  (காலாண்டுக்கு காலாண்டு) 1.50%  (ஆண்டுக்கு ஆண்டு)



மந்தநிலை

உற்பத்தி மற்றும் சில்லரை வர்த்தக துறைகளில் நிலவிய நெருக்கடியால் வருவாய் வளர்ச்சிக்கு பாதிப்பு



ஒப்பந்தங்கள்

புதிய ஒப்பந்தங்களின் மதிப்பு: 28% 

ஒட்டுமொத்த ஒப்பந்த மதிப்பு: 39% 

200+


பார்ச்சூன்
500
நிறுவன வாடிக்கையாளர்கள்
ரூ.1.78 லட்சம் கோடி
வருவாய்
3.29 லட்சம்+
பணியாளர்கள்



ஏ.ஐ.,க்கு முன்னுரிமை அளிக்கும் சேவைகள் மற்றும் தளங்களின் தொகுப்பாக 'இன்போசிஸ் டோபாஸ்' கடந்த 2023ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது



விபரம் (ரூ.கோடி) : 2022-23 : 2023-24 : 2024-25 : 2025-26

வருவாய் : 1,46,767 : 1,53,670 : 1,62,990 : 1,78,650

நிகர லாபம் : 24,108 : 26,248 : 26,750 : 29,474

எப்.சி.எப்., : 19,888 : 23,009 : 33,457 : 31,259

லாப வரம்பு (%) : 16 : 17 : 16 : 16

ஆர்.ஓ.இ., (%) : 32 : 32 : 29 : 32

பி/இ (மடங்கு) : 24.52 : 23.66 : 24.37 : 17.2

டிவிடெண்டு யீல்டு (%) : 2 : 3 : 3 : 4

Image 1652104



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us