உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 11, 2026 02:24 AM

அ நிறம் | அளவு
'ஜியோ பிளாக்ராக் மியூச்சுவல் பண்டு' நிறுவனம், குஜராத்தில் உள்ள கிப்ட் சிட்டியில் செயல்படுவதற்கான அனுமதியை, ஐ.எப்.எஸ்.சி.ஏ., ஆணையத்திடமிருந்து பெற்றுள்ளது.
ஏற்கனவே, செபியிடமிருந்து ஆரம்பகட்ட அனுமதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
'ஜியோ பைனான்ஸியல் சர்வீசஸ்' மற்றும் 'பிளாக்ராக்' நிறுவனங்களின் 50:50 கூட்டு முயற்சியாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம், முதற்கட்டமாக, தங்கம் மற்றும் வெள்ளி அடிப்படையிலான இ.டி.எப்., பண்டுகளை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, 14 திட்டங்கள் வாயிலாக, 18,500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை இந்நிறுவனம் நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
