உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 17, 2026 12:17 AM

அ நிறம் | அளவு
உலோக துறை பங்குகள் நேற்று ஏற்றம் கண்ட நிலையில், 'குஜராத் மினரல் டெவலப்மென்ட் காப்பரேஷன்' நிறுவன பங்குகள், 20 சதவீதம் உயர்ந்து, 52 வார உச்சத்தை எட்டியது. கடந்த மூன்று வர்த்தக நாட்களாகவே இந்நிறுவன பங்குகள் ஏறுமுகத்தில் இருந்து வந்த நிலையில், நேற்றைய வர்த்தக முடிவில், ஒரு பங்கின் விலை 746.75 ரூபாயாக நிறைவடைந்தது.
உலோகம் மற்றும் சுரங்க துறையில் முதலீட்டாளர்கள் காட்டிய ஆர்வத்தால், ஜி.எம்.டி.சி., நிறுவன பங்கு, கடந்த ஜூலை மாதத்துக்கு பின் ஒரே நாளில் கண்ட மிகப்பெரிய உயர்வாக இது அமைந்துள்ளது.
