தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஏறும்... ஆனா, ஏறாது! எச்சரிக்கை உணர்வில் முதலீட்டாளர்கள்

 ஏறும்... ஆனா, ஏறாது! எச்சரிக்கை உணர்வில் முதலீட்டாளர்கள்

 ஏறும்... ஆனா, ஏறாது! எச்சரிக்கை உணர்வில் முதலீட்டாளர்கள்


ADDED : மார் 21, 2026 01:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 01:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, பங்குச் சந்தைகள் ஏற்றத்துடனே முடிந்தன.

இருப்பினும், நேற்றைய உயர்வில் இருந்து சென்செக்ஸ் கிட்டத்தட்ட 800 புள்ளிகள் குறைந்து முடிந்திருப்பது, முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் சந்தையை அணுகுவதையே காட்டுகிறது. வரும் திங்களன்று சந்தை ஏற்றம் காணுமா அல்லது மீண்டும் சரிவைக் காணுமா என்ற கேள்விக்கான பதிலுடன் காத்திருக்கின்றனர். நேற்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 325 புள்ளிகள் உயர்ந்து 74,532 புள்ளிகளில் முடிந்தது. வர்த்தகத்தின் இடையில் சென்செக்ஸ் 1,079 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்பட்டது. நிப்டி 112 புள்ளிகள் அதிகரித்து 23,114 புள்ளிகளில் நிறைவடைந்தது.பொதுத்துறை வங்கிகள், ஐ.டி., உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

சந்தையை அழுத்தும் காரணங்கள்

* பிரீமியம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2 உயர்வு

* முதலீட்டாளர்கள் பங்குகளை டெலிவரி எடுக்க தயக்கம்

* அன்னிய முதலீட்டாளர்கள் 7,558 கோடிக்கு விற்பனை

ஹெச்.டி.எப்.சி., வங்கி பங்குகள் நேற்றும் சரிவு ஹெ ச்.டி.எப்.சி., வங்கியின் தலைவர் அதானு சக்ரவர்த்தி தன் பதவியை ராஜினாமா செய்ததன் எதிரொலியாக, இவ்வங்கி பங்குகள் நேற்றும் 2.22 சதவீதம் சரிந்து 780.45 ரூபாய்க்கு முடிந்தது. கடந்த அக்டோபரில் எட்டிய உச்ச விலையான 1,020 ரூபாயிலிருந்து 21 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும், நிர்வாகத்தில் முறைகேடுகள் ஏதுமில்லை என இவ்வங்கியின் இடைக்கால தலைவர் கேகி மிஸ்திரி விளக்கம் அளித்துள்ளார்.



ஸ்டீல் நிறுவன பங்குகள் ஏற்றம் ஸ்டீல் உற்பத்தி செலவுக்கும் அதன் விற்பனை விலைக்கும் இடையிலான இடைவெளி ஒரு டன்னுக்கு 24,180 ரூபாயிலிருந்து 31,620 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் முதல் ஸ்டீல் விலை 12 - 13 சதவீதம் வரை அதிகரித்துள்ளதால், வரும் காலாண்டுகளில், இத்துறை சார்ந்த நிறுவனங்களின் லாபம் கணிசமாக உயரும் என 'மெக்குவாரி மற்றும் ஹெச்.எஸ்.பி.சி., 'ஆகிய தரகு நிறுவனங்கள் சாதகமான அறிக்கையை வெளியிட்டுள்ளன. இது, இத்துறை சார்ந்த பங்குகளின் உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.



வாகன துறை பங்குகள் 15% சரிய வாய்ப்பு போர் பதற்றத்தால் வினியோக தொடர் பாதிப்பு மற்றும் உற்பத்தி தடை ஏற்படும் அச்சம் நிலவுவதால், இத்துறை பங்குகள் மேலும் 10 முதல் 15 சதவீதம் சரிய வாய்ப்புள்ளதாக சர்வதேச தரகு நிறுவனமான சி.எல்.எஸ்.ஏ., தெரிவித்துள்ளது. இதுதவிர, கச்சா எண்ணெய் மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வும் இந்நிறுவனங்களின் லாபத்தை குறைக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. 'மஹிந்திரா அண்டு மஹிந்திரா, பஜாஜ் ஆட்டோ, டி.வி.எஸ்., மோட்டார், டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்டு' ஆகிய பங்குகள் இந்த சரிவில் வாங்குவதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us