sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 தங்கம்: 10%, வெள்ளி: 38%, பிளாட்டினம்: 25% - சத்தம் இல்லாமல் உயரும் பிளாட்டினம் விலை

/

 தங்கம்: 10%, வெள்ளி: 38%, பிளாட்டினம்: 25% - சத்தம் இல்லாமல் உயரும் பிளாட்டினம் விலை

 தங்கம்: 10%, வெள்ளி: 38%, பிளாட்டினம்: 25% - சத்தம் இல்லாமல் உயரும் பிளாட்டினம் விலை

 தங்கம்: 10%, வெள்ளி: 38%, பிளாட்டினம்: 25% - சத்தம் இல்லாமல் உயரும் பிளாட்டினம் விலை


UPDATED : ஜன 24, 2026 01:40 AM

ADDED : ஜன 24, 2026 01:36 AM

Google News

UPDATED : ஜன 24, 2026 01:40 AM ADDED : ஜன 24, 2026 01:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கம் மற்றும் வெள்ளி விலை ஒருபுறம் உச்சம் கண்டு வரும் நிலையில், சத்தமில்லாமல், வரலாறு காணாத விலை உயர்வை எட்டியுள்ளது பிளாட்டினம். சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் பிளாட்டினம், அளவாக 2,684 டாலரை எட்டி, முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், இதன் விலை கிட்டத்தட்ட 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில், வெள்ளி 38 சதவீதமும்; தங்கம் 10 சதவீதமும் விலை உயர்ந்துள்ளன. பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி உலகம் நகர்வதையே இது காட்டுகிறது.

விலை உயர காரணம்


1 அமெரிக்காவின் வரிவிதிப்பு மற்றும் பொருளாதார கொள்கைகளில் நிலவும் நிலையற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் காகித முதலீடுகளை தவிர்த்து, பிளாட்டினம் போன்ற 'உலோக சொத்துக்களை' வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

2 சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்துள்ளதால், அன்னிய முதலீட்டாளர்களுக்கு பிளாட்டினம் வாங்குவது லாபகரமாக மாறியுள்ளது.

3 ஹைட்ரஜன் எரிபொருள் மற்றும் பசுமை ஆற்றல் துறையில் பிளாட்டினத்தின் தேவை அதிகரித்துள்ளதும் ஒரு முக்கிய காரணமாகும்.

முதலீட்டு வாய்ப்புகள்


* இந்தியாவில் தங்கம், வெள்ளிக்கு இருப்பதுபோல, பிளாட்டினத்துக்கு இ.டி.எப்., திட்டங்கள் இன்னமும் அறிமுகப்படுத்தப்படவில்லை. அமெரிக்க பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பிளாட்டினம் இ.டி.எப்.,களில் ஆன்லைன் வர்த்தக தளங்கள் வாயிலாக முதலீடு செய்யலாம்.

* அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம், 999 துாய்மை கொண்ட 1 முதல் 10 கிராம் வரையிலான பிளாட்டினம் கட்டிகளை, தர சான்றிதழுடன் வாங்கலாம்.

* டிஜிட்டல் முறையிலும் பிளாட்டினத்தில் குறைந்தபட்சமாக 100 ரூபாய் முதல் முதலீடு செய்ய முடியும்.Image 1525704

கவனிக்க வேண்டிய ரிஸ்க்


* தங்கத்தைப் போல பிளாட்டினத்தை உடனடியாக பணமாக்குவது இந்தியாவில் சற்று சவாலானது

* பல நகைக்கடைகள் பிளாட்டினத்தை மீண்டும் வாங்குவதில்லை

* இந்திய பங்குச் சந்தைகளில் பிளாட்டினத்துக்கு இ.டி.எப்.,கள் இல்லாததால், வர்த்தகம் செய்வது கடினம்

* தொழில்துறை சார்ந்த உலோகம் என்பதால், இதில் விலை ஏற்ற இறக்கங்கள் அதிகமாக இருக்கும்

தாராளமாக முதலீடு செய்யலாம்


உலக பிளாட்டினம் உற்பத்தியில் 70 சதவீத பங்களிப்பை தென் ஆப்ரிக்கா வழங்குகிறது. அங்கு நிலவும் உற்பத்தி தடைகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் வாகனங்கள், கிரீன் ஹைட்ரஜன் தொழில்நுட்பம் மற்றும் பைபர் ஆப்டிக்ஸ் போன்ற துறைகளில் பிளாட்டினத்தின் தேவை அதிகரித்துள்ளது. இவற்றுடன் உலகளாவிய அரசியல் பதற்றங்களும் இணைந்து கொள்வதால், விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.
இது, தொழில்துறை உலோகத்திலிருந்து, முக்கியமான மதிப்புமிக்க உலோகமாக மாறி வருவதால், தற்போதைய விலை ஏற்றம் நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், உற்பத்தி நிலைமைகள் அல்லது தொழில்துறை தேவையில் மாற்றங்கள் ஏற்பட்டால், பிளாட்டினம் விலை எதிர்வினை ஆற்றும்.
சிறுமுதலீட்டாளர்கள் பிளாட்டினத்தில் தாராளமாக முதலீடு செய்யலாம். ஆனால், இது தங்கத்தை விட அதிக விலை ஏற்ற இறக்கங்களை கொண்டது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
தொழில்துறை வளர்ச்சி மற்றும் ஆற்றல் மாற்றம் சார்ந்த ஒரு நல்ல முதலீட்டு கருவி என்பதால், நீண்டகால முதலீட்டாளர்கள் பிளாட்டினத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வரலாம்.
சமீபத்திய வலுவான ஏற்றத்திற்கு பின், திடீர் சரிவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதால், குறுகியகால வர்த்தகர்கள், அவரவர்களின் ரிஸ்க் எடுக்கும் தன்மையை பொறுத்து முடிவெடுப்பது நல்லது.
- கார்த்திக் ராஜா கண்ணன்,
குளோபல் ரிசர்ச் பிரிவு தலைவர்,
ஏற்றம் ரிசர்ச் இந்தியா








      Dinamalar
      Follow us