உள்ளடக்கத்திற்கு செல்ல

நடப்பாண்டில் ஏமாற்றம் தந்த தங்கம், வெள்ளி முதலீடுகள்
நடப்பாண்டில் ஏமாற்றம் தந்த தங்கம், வெள்ளி முதலீடுகள்
ADDED : மார் 24, 2026 12:58 AM

அ நிறம் | அளவு
ம த்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழலால் தங்கம் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு நேர்மாறாக சர்வதேச சந்தையிலும், இந்திய சந்தையிலும் விலை பலத்த சரிவை சந்தித்துள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, எம்.சி.எக்ஸ்., சந்தையில், ஏப்., மாதத்துக்கான முன்பேர வர்த்தக ஒப்பந்தத்தில் 10 கிராம் தங்கம் விலை கிட்டத்தட்ட 4.50 சதவீதம் சரிந்து, 1.38 லட்சம் ரூபாயாக வர்த்தகமானது.
மே மாதத்துக்கான முன்பேர வர்த்தக ஒப்பந்தத்தில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 4.46 சதவீதம் சரிந்து, 2.18 லட்சம் ரூபாயாக வீழ்ச்சியடைந்தது.
நடப்பு ஆண்டு துவக்கத்தில் இருந்து தங்கம் 20 சதவீதமும், வெள்ளி 50 சதவீதமும் சரிந்துள்ளன. இந்த ஆண்டில் இதுவரை தங்கம் மற்றும் வெள்ளி முதலீடுகள் நஷ்டத்தையே கொடுத்துள்ளன.
