1 லட்சம் கோடி ரூபாயை தாண்டிய கோல்டு இ.டி.எப்., சொத்து மதிப்பு
1 லட்சம் கோடி ரூபாயை தாண்டிய கோல்டு இ.டி.எப்., சொத்து மதிப்பு
ADDED : டிச 07, 2025 01:49 AM

நம் நாட்டில், கோல்டு இ.டி.எப்.,களின் மொத்த சொத்து மதிப்பு, கடந்த அக் டோபரில் 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக 'ஜீரோதா பண்டு ஹவுஸ்' வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது.
நடப்பாண்டின் முதல் 10 மாதங்களில், தங்க இ.டி.எப்.,களில் இதுவரை இல்லாத அளவாக, 27,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த 2020 முதல் 2024ம் ஆண்டு வரை முதலீடு செய்யப்பட்டதை விட அதிகம்.
அதேபோல, கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் 7.83 லட்சமாக இருந்த முதலீட்டாளர்கள் எண்ணிக்கை, நடப்பாண்டின் அக்டோபரில் 95 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இதேபோன்று, கடந்த 2022ல் வெள்ளி இ.டி.எப்.,துவங்கப்பட்டதிலிருந்து, கடந்த அக்டோபர் வரை 25 லட்சத்துக்கும் அதிகமான முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளதாகவும் 'ஜீரோதா பண்டு ஹவுஸ்' தெரிவித்துள்ளது.

