தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ தங்கம் 'ஆப்ஷன்' வர்த்தகம் 'ஸ்டிரைக் பிரைஸ்' உயர்வு

 தங்கம் 'ஆப்ஷன்' வர்த்தகம் 'ஸ்டிரைக் பிரைஸ்' உயர்வு

 தங்கம் 'ஆப்ஷன்' வர்த்தகம் 'ஸ்டிரைக் பிரைஸ்' உயர்வு


ADDED : ஜன 31, 2026 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 01:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கோல்டு, கோல்டு மினி' ஆகியவற்றுக்கான 'ஆப்ஷன்' வர்த்தகத்தில், 'ஸ்டிரைக் பிரைஸ்' இடைவெளியை மல்டி கமாடிட்டி சந்தை மாற்றியுள்ளது. இது, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த இரண்டுக்குமான இடைவெளி ஏற்கனவே 100 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் ஏற்கனவே வர்த்தகத்தில் உள்ள மற்றும் இனி வரப்போகும் ஒப்பந்தங்களுக்கும் பொருந்தும் என எம்.சி.எக்ஸ்., தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் கமாடிட்டி சந்தையில் ஒரு பொருளை எந்த விலைக்கு வாங்கலாம் அல்லது விற்கலாம் என நீங்கள் முன்கூட்டியே முடிவு செய்யும் விலையே, ஸ்டிரைக் பிரைஸ் எனப்படுகிறது.

உதாரணத்திற்கு, ஆப்ஷன் வர்த்தகத்தில் 1,60,100 ரூபாய், 1,60,200 ரூபாய் என விலைகள் இருந்தால் இனி, 1,60,500 ரூபாய், 1,61,000 ரூபாய் என்ற இடைவெளியில் மட்டுமே விலையை தேர்வு செய்ய முடியும்.

தங்கம் விலை லட்சம் ரூபாய்க்கு மேல் உயர்ந்துவிட்டதால், 100 ரூபாய் இடைவெளி என்பது மிகச்சிறியது. எனவே, வர்த்தகத்தை எளிமையாகவும் வேகமாகவும் மாற்றவே, இந்த 500 ரூபாய் இடைவெளி கொண்டுவரப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us