தங்கம், வெள்ளி இ.டி.எப்., ரூ.99,280 கோடி முதலீடு
தங்கம், வெள்ளி இ.டி.எப்., ரூ.99,280 கோடி முதலீடு
UPDATED : மே 01, 2026 03:02 AM
ADDED : மே 01, 2026 02:48 AM

இந்திய பங்கு சந்தையில் மியூச்சுவல் பண்டு மற்றும் பங்குகளை தாண்டி இ.டி.எப்., முதலீடுகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. 'ஜீரோதா பண்டு ஹவுஸ்' ஆய்வின்படி, 2025-26 நிதியாண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 1.81 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகள் இவற்றில் குவிந்துள்ளன.
வழக்கமாக பங்குகளிலேயே அதிக முதலீடு இருக்கும் நிலையில், இந்த முறை தங்கம் மற்றும் வெள்ளி இ.டி.எப்.,களில் மட்டும் 99,280 கோடி ரூபாய் (55 சதவீதம்) முதலீடு செய்யப்பட்டுள்ளது.
![]() |
அதிகரிக்கும்
ஆர்வம்
இ.டி.எப்., என்பது தற்போது வெறும் மாற்று முதலீட்டு முறை என்ற நிலையை கடந்து, இந்தியர்கள் செல்வம் சேர்ப்பதற்கான ஒரு மிக முக்கியமான அங்கமாக உருவெடுத்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஒட்டுமொத்தமாக இந்திய முதலீட்டு சந்தை ஒரு பெரிய மாற்றத்தை சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் வெறும் பங்குகளை மட்டும் சார்ந்து இருக்காமல், பாதுகாப்பு மற்றும் லாபத்திற்காக இ.டி.எப்., கட்டமைப்பை நோக்கி வேகமாக நகர துவங்கியுள்ளதாகவும் கூறுகின்றனர்.

