sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ மீண்டும் ஏற்றத்தை கண்ட தங்கம், வெள்ளி இ.டி.எப்.,

 மீண்டும் ஏற்றத்தை கண்ட தங்கம், வெள்ளி இ.டி.எப்.,

 மீண்டும் ஏற்றத்தை கண்ட தங்கம், வெள்ளி இ.டி.எப்.,


ADDED : பிப் 24, 2026 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 01:42 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் புதிய வரி விதிப்பு அறிவிப்புகளால், உலக சந்தையில் நிலவும் பதற்றத்தை தொடர்ந்து, இந்திய சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை நேற்று அதிரடியாக உயர்ந்தது.

'எம்.சி.எக்ஸ்.,' சந்தையில் நேற்று மாலை நேர நிலவரப்படி, மார்ச் 5ம் தேதிக்கான 10 கிராம் தங்கம் ஒப்பந்த விலை 1,59,700 ரூபாய் வரை உயர்ந்தும், வெள்ளியின் விலை 2,65,365 ரூபாய் வரை அதிகரித்தும் வர்த்தகமானது. இதன் எதிரொலியாக, தங்கம் மற்றும் வெள்ளி சார்ந்த இ.டி.எப்., முதலீடுகள், 10 சதவீதம் வரை வருமானத்தை கொடுத்து உள்ளன.

பிப்ரவரி மாத துவக்கத்தில் இருந்து வெள்ளி விலை கிட்டத் தட்ட 25 சதவீதமும், தங்கம் விலை 6 சதவீதமும் சரிவை சந்தித்திருந்த நிலையில், நேற்றைய ஏற்றம் முதலீட்டாளர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்து உள்ளது.

ஒரே நாளில் லாபம் தந்த இ.டி.எப்.,


வெள்ளி

எஸ்.பி.ஐ., சில்வர் இ.டி.எப்., : 10%
ஆக்சிஸ் சில்வர் இ.டி.எப்., : 10%
ஹெச்.டி.எப்.சி., சில்வர் இ.டி.ஜே.எஃப்., : 9.9%
நிப்பான் இந்தியா சில்வர் இ.டி.எப்., : 9%
ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் சில்வர் இ.டி.எப்., : 9%
தங்கம் டாடா கோல்டு இ.டி.எப்., : 6%
நிப்பான் இந்தியா கோல்டு இ.டி.எப்., : 3.5%
ஆக்சிஸ் கோல்டு இ.டி.எப்., : 3%
ஆதித்ய பிர்லா சன்லைப் கோல்டு இ.டி.எப்., : 2.7%



அதிக வருமானம் தந்த டாப் 5 இ.டி.எப்., (ஒரு ஆண்டு அடிப்படையில்)


வெள்ளி

டாடா சில்வர் 142.83%
ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்ஷியல் சில்வர் 142.52%
டி.எஸ்.பி., சில்வர் 142.45%
ஆதித்ய பிர்லா சன்லைப் சில்வர் 142.23%
கோட்டக் சில்வர் 141.93%
தங்கம் எல்.ஐ.சி., எம்.எப்., கோல்டு 75.79%
டாடா கோல்டு 75.36%
குவான்டம் கோல்டு 74.98%
பிர்லா சன்லைப் கோல்டு 74.79%
ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்ஷியல் கோல்டு 74.78%
ஆதாரம்: குரோ.இன்



நிபுணர்கள் கணிப்பு


“தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தற்காலிக ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், நடுத்தர கால அடிப்படையில் அதன் போக்கு சாதகமாகவே உள்ளது. தங்கம் 1,60,800 ரூபாய் என்ற எல்லையை தாண்டினால், விரைவில் 1.75 லட்சம் ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. அதேபோல, வெள்ளி 3 லட்சம் ரூபாய் முதல் 3.25 லட்சம் ரூபாய் வரை உயரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மேலும், இந்திய பங்குச்சந்தை மற்றும் கமாடிட்டி சந்தைகளில் தங்கம், வெள்ளி வர்த்தகத்துக்கான 'கூடுதல் மார்ஜின்' தொகையை 'எம்.சி.எக்ஸ்., மற்றும் என்.எஸ்.இ.,' ஆகிய இரண்டு நிறுவனங்களும் திரும்ப பெற்றுள்ளதும் விலை ஏற்றத்துக்கு ஆதரவாக அமைந்துள்ளது.” இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us