உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 03, 2026 04:03 AM

அ நிறம் | அளவு
இந்திய அரசின் 10 ஆண்டு கால கடன் பத்திரங்களின் வட்டி வருவாய் கடந்த மூன்று மாதங்களில் முதல் முறையாக 7 சதவீதத்தை கடந்துள்ளது. உலகளவில் அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் அரசு பத்திர வருவாயும் பல ஆண்டுகால உச்சத்தை எட்டியுள்ளது முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய நிலவரப்படி, 10 ஆண்டுகால அமெரிக்க அரசு பத்திரங்கள் மீதான வட்டி வருவாய் 4.81 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதுவே, கடந்த 2023 நவம்பர் மாதத்துக்கு பின் அதிகபட்ச வருவாய் ஆகும். இது மேலும் அதிகரிக்கும்பட்சத்தில், இந்திய அரசு பத்திரங்களின் வட்டி வருவாய் 7.15 சதவீதமாக அதிகரிக்கக்கூடும் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
