
பெங்களூருவை தலைமையகமாக கொண்டு செயல்படும் 'பில்லியன்ப்ரெயின்ஸ் காரேஜ் வெஞ்சர்ஸ்'ன் குரோவ் நிறுவனம், கடந்த 2016ல் ஒரு டைரக்ட் மியூச்சுவல் பண்டு பிளாட்பார்மாக துவங்கப்பட்டு, பெரிய அளவில் பிரபலமானது. தற்போது பங்கு, மியூச்சுவல் பண்டு உள்ளிட்ட பல்வேறு நிதி சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.
வெளியிடும் முறை:
புதிய பங்கு வெளியீடு: ரூ.1,060 கோடி
ஆபர் பார் சேல்: ரூ.5,572.30 கோடி
மொத்த மதிப்பு: ரூ.6,632.30 கோடி
ஐ.பி.ஓ.,
ஆரம்ப தேதி: 04.11.2025
இறுதி தேதி: 07.11.2025
முகமதிப்பு: ரூ.2
விலை வரம்பு: ரூ.95--100 வரை
விண்ணப்ப விபரம்:
குறைந்தபட்ச அளவு: 150 பங்குகள்
குறைந்தபட்ச தொகை: ரூ.15,000
பட்டியலிடப்படும் பங்குச் சந்தைகள்: என்.எஸ்.இ., மற்றும் பி.எஸ்.இ.,
நாள்: 12.11.2025 ( எதிர்பார்ப்பு)
சிறப்பம்சங்கள்:
* நவீன பங்கு தரகு நிறுவனங்கள் மத்தியில், மிகப்பெரிய நிறுவனமாக தொடர்ந்து இருந்து வருவது
* பயன்படுத்தும் முதலீட்டாளர்களின் பரிந்துரைகள் மற்றும் வாய்மொழி விளம்பரத்தால் வளர்ச்சி
* வலுவான பிராண்டு மற்றும் எளிதாக வர்த்தகம் செய்யக்கூடிய பிளாட்பார்ம் என்ற நிரூபணம்
* போட்டி குறைவாக இருப்பதால் வர்த்தக வாய்ப்பு அதிகரிக்கக்கூடும்
* பங்கு தரகு, மியூச்சுவல் பண்டு, கன்ஸ்யூமர் கிரெடிட், வெல்த் மற்றும் அசெட் மேனேஜ்மென்ட் போன்ற முழுமையான நிதி சார்ந்த சேவைகளை வழங்கும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது
*  ஒய்-காம்பினேட்டர் உள்ளிட்ட பல முன்னணி முதலீட்டாளர்கள் துவக்க நிலையிலேயே முதலீடு செய்துள்ளனர்
ரிஸ்குகள்:
*  பங்குச்சந்தை இறங்குமுகத்தில் சென்றால் வருமானத்தில் பாதிப்பு உருவாக வாய்ப்பு
*  செபி, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் மீறப்பட்டால் நிறுவனத்தின் தொழில், வருமானம், லாபத்தை பாதிக்க வாய்ப்பு
* எப் அண்டு ஓ.,  சந்தையில் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டால், அது இந்நிறுவனத்தினை பாதிக்கும்;  கடந்த நிதியாண்டில் 62 சதவீத வருமானம் இந்த பிரிவில் இருந்துதான் வந்துள்ளது
* தொழில்நுட்ப இடையூறு, இணைப்பு செயலிழப்பு, தரவு கசிவு ஏற்பட்டால், முதலீட்டாளர்களிடம் நம்பகத்தன்மையை குறைத்துவிடும்
* மற்ற தரகு நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்டவை வழங்கும் குறைவான சேவை கட்டணத்தால் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்
* சர்வதேச பொருளாதார மந்தநிலை, வட்டி விகிதம் மற்றும் விதிமுறைகளில் மாற்றம், புவியியல் மற்றும் அரசியல் பதற்றங்களும் வளர்ச்சியை பாதிக்கக்கூடும்
* எதிர்பார்த்த வளர்ச்சி வராது போனால், இந்நிறுவனத்தின் பங்குவிலை பாதிக்கும்
கவனம்:
முதலீடு செய்யும் முன் விலைமதிப்பீடு, சந்தையின் போக்கு மற்றும் நிறுவன வளர்ச்சியின் நிலைத்தன்மை ஆகியவற்றில், முழுமையான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். நிறுவனத்தின் அடிப்படை அம்சங்கள், நிறுவனத்தின் செயல்பாட்டு திறன் மற்றும் பங்கின் விலை மதிப்பிடப்பட்ட முறை ஆகியவற்றையும் முதலீட்டாளர்கள் விரிவாக ஆய்வு செய்தே முடிவெடுக்க வேண்டும்.

