தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ புதிய சர்ச்சையால் ஹெச்.டி.எப்.சி., வங்கி பங்குகள் சரிவு

 புதிய சர்ச்சையால் ஹெச்.டி.எப்.சி., வங்கி பங்குகள் சரிவு

 புதிய சர்ச்சையால் ஹெச்.டி.எப்.சி., வங்கி பங்குகள் சரிவு


ADDED : மே 28, 2026 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 05:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ம திப்புமிக்க டிபாசிட்களை முறைகேடாக பெற்றதாக எழுந்த புகாரால், நேற்றைய வர்த்தகத்தில் 'ஹெச்.டி.எஃப்.சி., பேங்க்' பங்குகள் 2.54 சதவீதம் வரை சரிந்து, 759 ரூபாய் என்ற அளவில் நிறைவு செய்தன.

'மகாராஷ்டிர மாநில சாலை மேம்பாட்டு் கழகத்தின்' டிபாசிட்டுகளை தக்கவைத்து கொள்வதற்காக, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி, கூடுதல் வட்டி பலனை 'மார்க்கெட்டிங் செலவு' போல காட்டி 45 கோடி ரூபாய் வரை வங்கி செலுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால், வங்கி நிர்வாகம் இக்குற்றச்சாட்டுகளை வலுவாக மறுத்துள்ளது.

வங்கியின் பகுதிநேர தலைவர் அதானு சக்ரவர்த்தியின் சமீபத்திய ராஜினாமா மற்றும் தற்போதைய சி.இ.ஓ., சஷிதர் ஜெகதீசனின் பதவிக்காலம் அக்டோபருடன் முடிவடைய உள்ள சூழலில், இந்த புதிய சர்ச்சை வங்கியின் 'கார்ப்பரேட் கவர்னன்ஸ்' மீதான நம்பகத்தன்மையை முதலீட்டாளர்களிடையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us