ஏர்போர்ட் லவுஞ்சை பயன்படுத்த ஹெச்.டி.எப்.சி., புது கட்டுப்பாடு
ஏர்போர்ட் லவுஞ்சை பயன்படுத்த ஹெச்.டி.எப்.சி., புது கட்டுப்பாடு
ADDED : டிச 20, 2025 01:55 AM

ஹெச்.டி.எப்.சி., வங்கி வாடிக்கையாளர்கள், ஒரு காலாண்டில் 5,000 ரூபாய் அளவுக்கு டெபிட் கார்டை பயன்படுத்தி செலவு செய்திருந்தால், தற்போது அவர்களுக்கு விமான நிலைய லவுஞ்சை பயன்படுத்திக்கொள்ள சலுகை வழங்கப்படுகிறது.
இந்த வரம்பை அடுத்த ஆண்டு ஜனவரி 10ம் தேதி முதல் 10,000 ரூபாயாக உயர்த்துவதாக இவ்வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு காலாண்டில் இத்தொகை அளவுக்கு டெபிட் கார்டுகள் வாயிலாக செலவழித்தவர்களுக்கு, அடுத்த இரண்டு வேலை நாட்களில் வவுச்சருக்கான இணைப்பு செல்போன், மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். அந்த இணைப்பை கிளிக் செய்து கிளெய்ம் செய்ய வேண்டும்.
இதையடுத்து 12--18 இலக்க டிஜிட்டல் வவுச்சர் குறியீட்டு எண், மொபைலுக்கும் மின்னஞ்சலுக்கும் அனுப்பப்படும். அதை விமான நிலைய லவுஞ்சில் காண்பித்து, அங்குள்ள வசதிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஸ்வைப் செய்து லவுஞ்சில் அனுமதிக்கும் முறை இனி ரத்து செய்யப்படுகிறது என்று அவ்வங்கி தெரிவித்துள்ளது.

