ADDED : ஏப் 21, 2026 12:42 AM

வ ட மாநிலங்களில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வெப்ப அலை எச்சரிக்கை காரணமாக, 'ஏசி' மற்றும் மின்சார உற் பத்தி நிறுவனங்களின் பங்குகள் விலை நேற்று ஏற்றம் கண்டன.
வரும் நாட்களில் டில்லியில் வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸை தொடும் என்பதால், 'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, பஞ்சாப், ஹரியானா மற்றும் வடக்கு ராஜஸ்தான் பகுதிகளில், அடுத்த சில நாட்களில் வெப்பநிலை கடுமையாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மின்சார தேவை மற்றும் ' ஏசி' விற்பனையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இது சார்ந்த நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.
மின்சாரம் மற்றும் ஏ.சி., உற்பத்தி நிறுவன பங்குகள்:
(20.04.2026)
என்.டி.பி.சி., 398.00 1.12% உயர்வு
டாடா பவர் 433.60 1.40% உயர்வு
அதானி பவர் 200.83 1.17% உயர்வு
புளூ ஸ்டார் 1,889.00 1.23%உயர்வு
வோல்டாஸ் 1,438.00 0.15% சரிவு
