sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

இந்த வாரம் எப்படி இருக்கும்?

/

இந்த வாரம் எப்படி இருக்கும்?

இந்த வாரம் எப்படி இருக்கும்?

இந்த வாரம் எப்படி இருக்கும்?


ADDED : அக் 06, 2025 12:38 AM

Google News

ADDED : அக் 06, 2025 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அப்பு: எப் அண்டு ஓ., எக்ஸ்பைரிக்கு அப்புறம், எப்புடி சந்தை ஏறிடுச்சு பாத்தீங்களா டவுனு?

டவுனு: சரி, நான் சொன்ன மாதிரி செவ்வாய்க்கிழமை வரை இறங்குச்சே, அதற்காக என்னை பாராட்டுங்க அப்பு.



நியுட்ரன்: இறங்குச்சாம், ஏறுச்சாம். வர்ற வாரம் பாருங்க... எங்க ராஜ்ஜியம்தான். போன வெள்ளிக்கிழமையே அதுக்கு அச்சாரம் போடற மாதிரி தான் இருந்துச்சு.



டவுனு: ஓரளவுக்கு ஆசைப்படலாம். ஆனா நியூட்ரன் நீங்க ரொம்பவுமே பேராசைப்படுறீங்க. ஒரு நாள், இரண்டு நாள் பெரிய மாறுதல் இல்லாமப் போகலாம். அதுக்காக, வாரம் முழுவதும் உங்க ராஜ்ஜியமா இருக்கப்போகுதுன்னு கொக்கரிக்காதீங்க. வர்ற வாரத்துல வரஇருக்க செய்திகளை சொல்லுங்க கேப்போம்.

நியுட்ரன்: ஒண்ணும் பெரிசா இல்லை. எச்.எஸ்.பி.சி., காம்போசைட் பி.எம்.ஐ., எச்.எஸ்.பி.சி., சர்விசஸ் பி.எம்.ஐ., வங்கிகளின் டிபாசிட் தொகையில் கண்ட வளர்ச்சி, வங்கிகள் வழங்கிய கடன் அளவில் வளர்ச்சின்னு, ஒரு சில இந்திய பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வர இருக்கு. பேலன்ஸ் ஆப் டிரேட், எப்.ஓ.எம்.சி., மினிட்ஸ், ஜாப்லெஸ் க்ளெய்ம்ஸ், மிச்சிகன் கன்ஸ்யூமர் சென்டிமென்டுனு ஒரு சில அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வர இருக்கு.

டவுனு: பெருசா டேட்டாகள் ஏதுமில்லைங்கிறதால, உங்க ராஜ்ஜியமா இருக்கப் போகுதுங்கிறீங்களா நியூட்ரன்? என்ன மாதிரி விஷயங்கள் நடக்கப் போகுது; செய்திகள் எப்படி இருக்கப் போகுதுன்னும் பார்க்கணுமில்லை?

அப்பு: முக்கியமான விஷயத்தை விட்டுட்டீங்க. காலாண்டு முடிவுகள் வர ஆரம்பிச்சுருமே?

நியுட்ரன்: அத மறந்துட்டேன். இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுடைய காலாண்டு முடிவுக்கான போர்டு மீட்டிங் இருக்கு. இதுல டி.சி.எஸ்., டிமார்ட் போன்ற நிறுவனங்களுடைய காலாண்டு முடிவுகளும் இருக்கு.

டவுனு: அப்படின்னா பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது போல இருக்கே!

நியுட்ரன்: வாராந்திர ரீதியா 24,685, 24,475 மற்றும் 24,360 என்ற அளவில் ஆதரவும்; 25,000, 25,110 மற்றும் 25,230 என்ற அளவில் தடுப்பம் டெக்னிக்கலா இருக்க வாய்ப்பு இருக்கு.

அப்பு: நீங்க சொல்ற லெவல்களைப் பார்த்தா, ஏற்ற இறக்கம் ஓரளவுக்கு இருக்கும் போல இருக்கே!

டவுனு: அப்புறம் என்ன, 24,795-க்கு கீழே போனா, எங்க ராஜ்ஜியம்தான்!

அப்பு: என்னங்க நீங்களும் ராஜ்ஜியமுன்னு பேச ஆரம்பிச்சுட்டீங்க. சந்தை ஒரே பக்கமா போனா, அன்றாட வர்த்தகம் பண்ணுவது எப்படி? எனக்கென்னவோ கொஞ்சம் வாலட்டைலா இருந்தாலும், இந்த வாரம் லைட்டா ஏறுமுன்னுதான் தோணுது...

அப்பு சொல்லும்போதே அவரது செல்போன் ஒலிக்க, இதோ வந்துட்டேன் என்றபடி கிளம்ப எத்தனித்தார். கூடவே டவுனும், நியுட்ரனும் அவரவர் செல்ல வேண்டிய திசையில் கிளம்பினார்கள்.






      Dinamalar
      Follow us