sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?


ADDED : டிச 01, 2025 01:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2025 01:58 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அப்பு: என்ன நியுட்ரன், வியாழன், வெள்ளியில உங்களுக்கான வாய்ப்பும் கிடைச்சது போல?



டவுனு: 320 பாயின்ட் ஒரே நாளில ஏறினா, அதுதான் கதி!



நியுட்ரன்: என்ன விரக்தியில பேசறீங்க? வாராந்திர அளவில 134 புள்ளிதான் நிப்டி ஏறியிருக்கு. அதுக்குள்ள மனச விட்டுட்டா எப்படி டவுனு?

டவுனு: இருந்தாலும், 320 அப்படிங்குறதெல்லாம் ஏத்துக்க முடியாதுங்க.

அப்பு: ஏத்துக்க முடிஞ்சாலும் முடியாட்டாலும், அதுதானே நிதர்சனம்! போன வாரமே நான் சொன்னேனில்ல, எங்ககிட்ட எனர்ஜி அதிகமா இருக்குன்னு.

டவுனு: நிப்டியை மட்டும் ஏத்தி விட்டுட்டா, பெரிய ஆளா நீங்க?

நியுட்ரன்: சண்டை போடாதீங்க சார். வர்ற வாரம் வர இருக்குற பொருளாதார தரவுகளைப் பார்ப்போம். எச்.எஸ்.பி.சி., மேனுபேக்சரிங் பி.எம்.ஐ., இண்டஸ்ட்ரீயல் புரொடக்ஷன், மேனுபேக்சரிங் புரொடக்ஷன், எச்.எஸ்.பி.சி., சர்வீசஸ் பி.எம்.ஐ., ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித முடிவுகள் அப்படின்னு சில இந்திய பொருளாதார தரவுகள் வெளிவர இருக்கு.

இதேமாதிரி ஐ.எஸ்.எம்., மேனுபேக்சரிங் பி.எம்.ஐ., - ஐ.எஸ்.எம்., சர்விசஸ் பி.எம்.ஐ., ஜாப்லெஸ் கிளெய்ம்ஸ், மிச்சிகன் கன்ஸ்யூமர் சென்டிமென்ட், பெர்சனல் இன்கம் மற்றும் ஸ்பென்டிங் அப்படின்னு ஒரு சில அமெரிக்க தரவுகளும் வெளிவர இருக்கு.



அப்பு: ரிசர்வ் வங்கி வட்டிவிகிதம் இருக்குதுல! அப்ப சந்தையில பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.



டவுனு: டெக்னிக்கலா 25,927, 25,651 மற்றும் 25,473-ல வாராந்திர சப்போர்ட்டும், 26,395, 26,586 மற்றும் 26,765-ல வாராந்திர ரெசிஸ்டென்சும் இருக்கு. ஒரு நாள் 320 பாயின்ட் ஏறினதால, சப்போர்ட் ரெசிஸ்டென்ஸ் லெவல் எப்படி தள்ளித்தள்ளிப் போயிருக்கு பாருங்க.

நியுட்ரன்: அட விடுங்க! மறுபடி மறுபடி அதையே சொல்லிகிட்டு. வர்ற வாரம் எப்படியிருக்குமுன்னு சொல்லுங்க.

அப்பு: நியூட்ரன் இந்த வாரம் உங்களுக்கு ஒண்ணு ரெண்டு நாள் சான்ஸ் இருக்க வாய்ப்பிருக்கு. சந்தோசமா இருங்க.

டவுனு: செய்திகள் எங்களுக்கு சாதகமா இருந்தா, எங்க கை ஓங்கிவிடும்.

அப்பு: ஒண்ணு ரெண்டு நாள் அப்படியும் இருக்கலாம்!

நியுட்ரன்: அட! அப்புவா இதை சொல்றது!!

டவுனு: இதுக்கு காரணம் என்ன தெரியுமா? அந்த 320.

நியுட்ரன்: ஹய்யோ. ஹய்யோ. ரொம்ப மன வருத்தத்துல டவுனு இருக்காரு போல.

அப்பு: செய்திகள் சாதகமா இருந்தா, எங்க கை ரொம்பவுமே ஓங்கிவிட வாய்ப்பு இருக்கு. ஓரளவுக்கு 'ஓவர் பாட்' ஆக சந்தை மாறாம இருக்கதாலதான் இதை சொல்றேன்.

டவுனு: இந்த வாரமும் இன்னுமொரு 320 பாயின்ட் ஏத்துங்க. ஓவர் பாட் ஆகிடும்!

நியுட்ரன்: அந்த 320-ஐ விட மாட்டேங்கிறீங்களே! சொல்லுங்க டவுனு உங்க கணிப்பு என்ன?

டவுனு: செய்திகள் தான் இந்த வாரம் சந்தையை நகர்த்தும். செய்திகள் பெரிசா இல்லாட்டி, உங்க ராஜ்ஜியம்தான் நியுட்ரன். ஒருவேளை 26,100-க்கு கீழ வந்தா, அப்புறம் நாங்க யாருன்னு காட்டுவோ ம்.

நியுட்ரன்: அட! டவுனு வாயால இதை கேட்கும் போது எனக்கு புல்லரிக்குது. என்னை ஓவரா கலாய்ப்பீங்க. இப்ப என் ராஜ்ஜியமுங்கிறீங்க.

டவுனு: எல்லாம்………..

நியுட்ரன்: சார். மறுபடியும் அதை கிளறாதீங்க. அப்பு இறுதியா ஏதாவது சொல்லுங்க புறப்படலாம்.

அப்பு: டவுனு சொன்ன மாதிரி செய்திகள் தான் யார் கை ஓங்கும் என்பதை முடிவு பண்ணும். செய்திகள் பெருசா இல்லைன்னா இந்த வாரத்தில பெரும்பான்மையான நாள் நியுட்ரனோட ராஜ்ஜியம்தான்.

நியுட்ரன்: எனக்கு வாய்ப்பு இருக்கலாமுங்கறதை கேட்கும் போதே சந்தோஷமா இருக்கு. வாங்க, உங்களுக்கு ஒரு ட்ரீட் தர்றேன் என்று சொல்ல மூவரும் ஒரு ரெஸ்டாரென்ட்டிற்கு சென்றனர்.

அங்கே 'கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்' என்ற பாட்டு ரேடியோவில் ஒலித்துக்கொண்டிருந்தது.

செய்திகள் தான் யார் கை ஓங்கும் என்பதை முடிவு பண்ணும். செய்திகள் பெருசா இல்லைன்னா இந்த வாரத்தில பெரும்பான்மையான நாள் நியுட்ரனோட ராஜ்ஜியம் தான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us