sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

/

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?


ADDED : டிச 08, 2025 01:49 AM

Google News

ADDED : டிச 08, 2025 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டவுனு: என்ன நியுட்ரன், அட்வான்ஸா ட்ரீட் கொடுத்துட்டு, வாரத்தையே உங்க கட்டுப்பாட்டுல வச்சிக்கீட்டீங்களே?!

நியுட்ரன்: அதென்ன அப்படிச் சொல்லீட்டீங்க! இந்த வாரம் நாம் எல்லாரும் வின்னர் தான். முதல் மூணு நாள் நீங்க. அடுத்த ரெண்டு நாள் அப்பு. கூட்டிக்கழிச்சுப் பார்த்தா நான். இதெல்லாம் எனக்கு வெற்றியே இல்லை. ஒரு வாரம் தொடர்ந்து அன்றாடம் என் கையில சந்தை இருக்கணும். அதுதான் வெற்றி.

அப்பு: இவ்வளவு நாள் சந்தையில இருந்துட்டு, இப்படிச் சொல்றீங்களே நியுட்ரன்? ரொம்ப ரொம்ப அரிதா தான் ஐந்து நாள் சந்தை அப்பு, டவுனு, நியுட்ரன்னுன்னு யாராவது ஒரு ஆள் கையில இருக்குமுங்கறதை நீங்க பார்த்ததில்லையா?

டவுனு: அதெல்லாம் அவருக்குத் தெரியும். ஆனா, அப்பப்ப பேராசைப்படுவாரு!

அப்பு: நியுட்ரன் சார் உங்க பெயருக்கே பேராசை இல்லாதவர் என்பது தான் அர்த்தம். அதை அடிக்கடி மறந்துடறீங்களே!

நியுட்ரன்: சரி சரி விஷயத்துக்கு வருவோம்… இன்ப்ளேஷன் ரேட், வங்கிகளில் இருக்குற டிபாசிட் மற்றும் வங்கிகள் வழங்கிய கடனின் அளவில் வளர்ச்சி, அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதார தரவுகளும் ஜே.ஓ.எல்.டி.எஸ்., ஜாப் ஓபனிங்ஸ், அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டிவிகித முடிவுகள், பேலன்ஸ் ஆப் டிரேட், புரொட்யூசர்ஸ் ப்ரைஸ் இண்டெக்ஸ் போன்ற அமெரிக்க பொருளாதார தரவுகளும் வரும் வாரத்துல வெளிவர இருக்கு.

அப்பு: பார்றா! என்னமா சப்ஜெக்டை மாத்தறாரு.

நியுட்ரன்: 25,940, 25,700, 25,530-ல சப்போர்ட்டும், 26,375, 26,570, 26,735-ல ரெசிஸ்டென்ஸிம் இருக்கு. 26,135-க்கு கீழே போனா இறக்கம் வரலாம்.

டவுனு: நான் சொன்னதை நீங்க காதுலயே வாங்கலையில்ல நியுட்ரன்?

நியுட்ரன்: எல்லாம் வாங்குனேன். என்னமோ பேராசைங்கிறது உங்க ரெண்டு பேரோட சொத்து மாதிரி பேசறீங்களே, அதனால அதை அசால்ட்டா டீல் பண்ணினேன். சந்தை ஏறணும் இறங்கணுமுன்னு நீங்க ஆசைப்படறதெல்லா பேராசையில்லை; ஒரே இடத்துல நிக்கணுமின்னு நான் படற ஆசை தான் மிகப்பெரிய பேராசை ஜென்டில்மென்! ஏன்னா சந்தைன்னாலே அது ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டது.

அப்பு: தத்துவமா பொழியறீங்களே நியுட்ரன்! வர்ற வாரம் எப்படி இருக்குமுன்னு சொல்லுங்க.

டவுனு: இங்கிலீஷ் டிக்ஷனரி மாதிரி இருக்கும்.

அப்பு: என்ன உளர்றீங்க?

நியுட்ரன்: அட! இது புரியலையா. டவுன், நியுட்ரன், அப்பு (D,N,U) என்கிற வரிசையிலதான் ஆங்கில டிக்ஷனரியில நம்ம பேரு இருக்கும். அதைச் சொன்னேன்!

டவுனு: கரெக்டா சொன்னீங்க போங்க!

நியுட்ரன்: டவுனு மொதல்லன்னவுன்னே என்ன ஒரு சந்தோஷம் பாருங்க..

அப்பு: அவரோட சந்தோஷம் வாரம் முழுக்க நிலைக்காது. செய்திகள் மட்டும் கொஞ்சம் சாதகமா இருந்துட்டா, 'நாங்க சொல்றது தான் மார்கெட்டு'ங்குற நிலையில சந்தை இருக்கும்.

டவுனு: ஓரளவுக்கு இது உண்மை தான். ஆனால் செய்திகள் எப்படியிருக்குமின்னு யாருக்கு தெரியும்? என்ன செய்தி வந்தாலும் 26,250-ல நல்லதொரு ரெசிஸ்டென்ஸ் இருக்கு. அங்க புடிச்சு ஒரு அமுக்கு அமுக்குனோமுன்னா 25,950 வரைக்கும் இறக்கி விட்டுடுவோம். அதற்கு கீழே போனா எங்க கை ஓங்கியிருச்சுன்னு அர்த்தம்.

நியுட்ரன்: நீங்க சொல்ற மாதிரி உங்க ஆசை பலிச்சா எனக்கும் வெற்றிதான்.

அப்பு: இந்த வாரம் வாராந்திர அளவுல கூட நீங்க வெற்றிபெற முடியாது. நிப்டி உச்சத்துக்கு கிட்ட இருக்கறதால, இந்த வாரம் கணிக்கிறதுல குழப்பமான சூழல் இருக்கு. ஆனா செய்திகளுக்கு ஏத்த மாதிரி சந்தை கரெக்டா ரியாக்ட் ஆயிடும்.

நியுட்ரன்: ஆங்! சொல்ல மறந்துட்டேன் நேட்டிவ் ப்ளேஸ்ல ஒரு வேலை இருக்கு. நாலு நாள் ஊருக்கு போறேன்.

அப்பு: அது என்ன நாலு நாள். வியாழக்கிழமை இரவு அமெரிக்க பெட்ரல் ரிசர்வ் வட்டிவிகிதம் வேற வெளிவர இருக்கு. வாரம் பூரா ஊரிலேயே இருந்துட்டு வாங்க. சந்திப்போம்.

அப்பு சொல்ல, அப்படியே மூவரும் கிளம்பினர்.

25,940, 25,700, 25,530-ல சப்போர்ட்டும், 26,375, 26,570, 26,735-ல ரெசிஸ்டென்ஸும் இருக்கு. 26,135-க்கு கீழே போனா இறக்கம் வரலாம்






      Dinamalar
      Follow us