sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

/

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?


ADDED : டிச 15, 2025 02:09 AM

Google News

ADDED : டிச 15, 2025 02:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியுட்ரன்: சொந்த ஊருக்குப் போயிட்டு திரும்பி வர்ரேன்னுதானே போனேன். நீங்க இரண்டு பேரும் போட்ட போடுல நான் ஊரிலேயே செட்டிலாகிடணும் போலல்ல இருக்குது!

டவுனு: வாய்ப்பு கிடைச்சது. வாசிச்சுவிட்டுட்டோம். அவ்வளவு தான்!

அப்பு: வியாழன், வெள்ளியில நாங்க உங்கள கதறவிட்டோம்ல.

நியுட்ரன்: என்ன வாசிப்போ... என்ன கதறலோ!

அப்பு: வர்ற வாரம் ஹோல்சேல் பண வீக்கம், அன் எம்ப்ளாயின்மென்ட் ரேட், ஏற்றுமதி இறக்குமதி, எச்.எஸ்.பி.சி., மேனுபேக்சரிங் /சர்வீசஸ் பி.எம்.ஐ.,-க்கள், அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதார தரவுகள் வெளிவர இருக்குது.

விவசாயமல்லாத பணியாளர்கள், வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை, எஸ் அண்டு பி., குளோபல் மேனுபேக்சரிங் / சர்வீசஸ் பி.எம்.ஐ.,-க்கள், பணவீக்க விகிதம், கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் விற்பனை போன்ற அமெரிக்க பொருளாதார தரவுகளும் வெளிவர இருக்குது.

டவுனு: 25,760, 25,480, 25,300-த்தில வாராந்திர சப்போர்ட்டும், 26,250, 26,460, 26,640-த்தில நிப்டிக்கு வாராந்திர ரெசிஸ் டென்சும் இருக்க வாய்ப்பிருக்கு.

நியுட்ரன்: நான் கிளம்பட்டுமுங்களா?

அப்பு: என்ன சார், வந்தவுடனேயே கிளம்பறீங்க?

நியுட்ரன்: நான் 'ஹர்ட்' ஆயிட்டேன் சார். சந்தையிலேயும் வேலையில்லை. அது குறித்த டிஸ்கஷனிலேயும் பங்களிப்பில்லை.

டவுனு: இதை எதிர்பார்த்து தான் நாங்க பேசி வச்சுக்கிட்டு மூச்சுவிடாம விபரத்தை சொன்னோம்.

நியுட்ரன்: அதானே பார்த்தேன். டவுனோட பிளானா இது?

அப்பு: வர்ற வாரம் சந்தை எப்படியிருக்குமுன்னு நீங்களே சொல்லுங்க.

நியுட்ரன்: ஓ... குழப்பமான சூழ்நிலையிலே பேசவைச்சு வேடிக்கை பார்க்க நினைக்கிறீங்க. பரவாயில்லை, சமீபமா பெரும்பாலும் டெக்னிக்கலா கணிப்பது ஒண்ணும் நடப்பது ஒண்ணுமா தான் இருக்குது.

இறங்குற மாதிரி போய் ஏறுறதும், ஏறுற மாதிரி போய் இறங்குறதுமா ரொம்ப வாலட்டைலா போகுது. குத்துமதிப்பா எனக்கென்னவோ வர்ற வாரம் அப்புவோட கை ஓங்க வாய்ப்பு இருக்குன்னு தோணுது.

டவுனு: இதோ பாருங்க. விளையாட்டா நான் உங்களை ரொம்ப கிண்டல் பண்ணுவேன். அதுக்காக மார்க்கெட்டுல என்னோட பங்களிப்பே இருக்காதுன்னு இருட்டடிப்பு செய்யக்கூடாது.

நியுட்ரன்: போனவாரம் டவுனுதான் முதல்ல சொன்னேன் மறந்துட்டீங்களா? அப்ப சந்தோஷப்பட்டீங்கல்ல! புரொபஷனல் எத்திக்ஸ் உள்ளவன் நான். என் கணிப்பை சொல்றேன். நடக்குறதும் நடக்காமப் போறதும் என் கையில இல்லை.

அப்பு: ஆமாம். நியுட்ரன் அவரு பேரைப்போலவே ரொம்ப நியாயமான ஆளு.

டவுனு: ஒரு பேச்சுக்கு சொன்னேன்.

நியுட்ரன்: செய்திகள் கையில தான் சந்தை இருக்கப்போகுது. டெக்னிக்கலா சந்தையோட நிலைமை கடந்த வார இறுதியில கொஞ்சம் திசை தெரியாம தான் இருக்கு.

ஆனா திசை தெரியா நிலை, கன்சாலிடேஷனுங்கறதெல்லாம் என்னான்னு கேட்பதைப்போல் செய்திகள் தினம்தினம் சந்தையைப் புரட்டி போட்டுடுது. பல சமயம் டெக்னிக்கல்கள் சொல்லி வச்ச மாதிரி வேலை செய்யாமப் போயிடுது.

'வீடு பூட்டியிருக்கு அப்படீன்னா வீரபாகு உள்ளதான் இருப்பான்'ங் கிற காமெடி மாதிரி, சார்ட் இதைக் காட்டுது. அதனால சார்ட் காட்டுவது நடக்காதுங்கற மாதிரியான நடப்பெல்லாம் சமீபத்துல நடந்துருக்கு.

அப்பு: இதுக்கு காரணம் செய்திகள் தாங்க. செய்திகள் வருவதால் சந்தை மாறுதா? சந்தை மாறியதால் செய்திகள் வந்ததா? என்று பட்டிமன்றமே ந டத்தலாம் போல.

ஒரு நிச்சயதார்த்தத்துக்கு போகணும் நான் கிளம்பறேன் என்று டவுனு கிளம்ப, மற்ற இருவரும் புறப்பட் டனர்.






      Dinamalar
      Follow us