sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

/

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?


ADDED : ஜன 05, 2026 01:46 AM

Google News

ADDED : ஜன 05, 2026 01:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியுட்ரன்: சந்தை இறக்க ஏற்றமா இருக்க வாய்ப்பிருக்குன்னு சொன்னீங்க டவுனு. அதே மாதிரி இரண்டு நாள் இறக்கி விட்டீங்க. அப்பு, அவர் பங்குக்கு மீதி நாட்களிலே ஒரேயடியாய் ஏற்றி விட்டாரே!

அப்பு: சம்பவம் பண்ணினதையும் பார்த்தீங்க. அதுல ரிக்கார்டு வச்சதையும் பார்த்தீங்கல்ல!

நியுட்ரன்: புதிய வரலாற்று உச்சத்துக்கு நிப்டி போனதை சொல்லி பெருமைப்படறீங்க. நடக்கட்டும் நடக்கட்டும்.

டவுனு: வர்ற வாரம் ஹெச்.எஸ்.பி.சி., சர்வீசஸ் பி.எம்.ஐ., எம்3 பணப்புழக்கம், வங்கிகள் வழங்கிய கடன் மற்றும் வைப்புத்தொகை வளர்ச்சி போன்ற இந்திய பொருளாதார தரவுகளும், ஐ.எஸ்.எம்., மேனுபேக்சரிங் பி.எம்.ஐ., - ஐ.எஸ்.எம்., சர்வீசஸ் பி.எம்.ஐ., - ஜே.ஓ.எல்.டி., ஜாப் ஓப்பனிங்ஸ், வழங்கப்பட்ட கட்டுமானத்துக்கான அனுமதிகள், வேலையில்லாத நபர்கள் எண்ணிக்கை போன்ற அமெரிக்க பொருளாதார தரவுகளும் வெளிவர இருக்கு.

நியுட்ரன்: வாராந்திர டெக்னிக்கல் சப்போர்ட் 26,024, 25,720 மற்றும் 25,544-லயும், ரெசிஸ்டென்ஸ் 26,486, 26,644 மற்றும் 26,821-லயும் இருக்குது.

டவுனு: இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த டெக்னிக்கெல்லாம் ஜெயிக்காது.

நியுட்ரன்: என்னங்க இப்படி பொசுக்குன்னு சொல்லீட்டீங்க.

டவுனு: இறங்குற ஐடியாவே இல்லைங்குற மாதிரி மேலேயே போகுதே, அதனால தான் சொல்றேன்.

அப்பு: அப்படியெல்லாம் மனசை விட்டுடாதீங்க. வெனிசுலா பிரச்னை வேற புதுசா உருவாயிருக்கு. காலாண்டு முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பும் சந்தையை வழிநடத்தும்.

டவுனு: அது, கச்சா எண்ணெய் சார்ந்த செக்டார்களில் தாக்கம் தர வாய்ப்பிருக்கு.. இந்த வாரம் பெரிசா காலாண்டு முடிவுகளும் வெளிவர போறதில்லை.

நியுட்ரன்: அட, எப்படி உற்சாகமா என்னை கலாய்ச்சுக்கிட்டே இருப்பீங்க. இப்படி ஒரேயடியாய் டவுனாயிட்டீங்களே.

அப்பு: கவலைப்படாதீங்க டவுனு, ஏதாவது ஒரு காரணம் உங்களுக்கு கிடைக்கும்.

நியுட்ரன்: அப்பு, வர்ற வாரம் குறித்த உங்க கணிப்பை சொல்லுங்க.

அப்பு: 26,180-க்கு கீழே போனா இறக்கம் வரக்கூடும்.

டவுனு: சும்மா என் ஆறுதலுக்காக சொல்லாதீங்க. நிஜமா என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க.

அப்பு: நிஜமாத்தான் டவுனு, ஜியோபொலிட்டிக்கல் விஷயங்களிலே திடீர் திடீரென்று செய்திகள் வரும். அதற்கேற்றாற்போல் சந்தையும் ரியாக்ட் ஆகும். நீங்க இந்த அளவுக்கு மனசை விட வேண்டியதில்லை.

நியுட்ரன்: எப்ப பார்த்தாலும் நான் தான் வாய்ப்பில்லை வாய்ப்பில்லைன்னு புலம்புவேன். டவுனு தனக்கு வாய்ப்பில்லாம போயிடுமோன்னு கவலைப்படுறத முதல் முறையா பார்க்குறேன்.

அப்பு: எப்பவுமே செய்திகள் தான் உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அதை எதிர்பார்த்து காத்திருங்க டவுனு.

டவுனு: அப்படி இல்லீங்க அப்பு. 2025-ல வாராந்திர அடிப்படையில 26 வாரம் நிப்டி ஏறியும், 26 வாரம் இறங்கியும் இருந்தது. அது மாதிரி இருந்தாத்தான் நல்லா இருக்கும்.

நியுட்ரன்: எனக்கு போன வருஷம் வாராந்திர அடிப்படையில வாய்ப்பே கிடைக்கல. நான் கவலைப்பட்டேனா... இதுக்கெல்லாம் கவலைப்பட்டா என்னாகுறது.

அப்பு: இதுக்கெல்லாம் கவலைப்பட்டா வியாபாரம் பண்ண முடியுமா. சந்தையை பொறுத்தவரை வாய்ப்பு கிடைச்சா வியாபாரம் பண்ணிக்கணும்.

நியுட்ரன்: வாய்ப்பு எப்ப வருமுன்னு சொல்ல முடியாது. கண் கொத்திப் பாம்பா இருக்கணும்.

டவுனு: சில சமயம் ஒரு வருஷம் கூட வராமப் போயிடும். கலங்காம இருக்கணுமுங்கிறீங்க.

நியுட்ரன்: பார்றா நக்கலை. டவுனை மறுபடியும் கிக்ஸ்டார்ட் பண்ணியாச்சு என்று சொல்ல, அப்பு சத்தமாக சிரித்துக்கொண்டே அடுத்த வாரம் சந்திப்போம் என்று சொல்லி, மூவரும் கிளம்பினர்.






      Dinamalar
      Follow us