sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

/

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?


ADDED : பிப் 09, 2026 02:13 AM

Google News

ADDED : பிப் 09, 2026 02:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியுட்ரன்: குத்து மதிப்பா சந்தையின் போக்கை கணிக்கிறது சிரமமுன்னு ெரண்டு வாரத்துக்கு முன்னாடி சொல்லீட்டு போனீங்க. போன வாரம் நாம சந்திக்கலை. ஆனா, ெரண்டு வாரத்துக்கும் சேர்த்து நீங்க சொன்னது சரியா இருந்துடுச்சு டவுனு.

டவுனு: நாம கடைசியா சந்திச்சதுக்கு அப்புறம், 10 வர்த்தக நாள் இருந்துச்சு. இந்த 10 நாட்களில் நிப்டி குறைந்தபட்சமா 24,571-க்கும், அதிகபட்சமா 26,341-க்கும் போயிட்டு வந்து 25,693-ல நிறைவடைந்துச்சு.

வாராந்திர அளவீட்டில் பார்த்தால், கடைசி ஆறு வர்த்தக நாளில் 1,769 புள்ளிகள் அளவிலான வித்தியாசம் (அதிகம் மற்றும் குறைவுக்கு இடையே உள்ள) இருந்துச்சு. ஓப்பனிங்கிற்கும், குளோசிங்கிற்கும் இடையிலே 359 (ஆறு நாள் அளவில் ஏற்றம்) புள்ளிகள் அளவிலான வித்தியாசம் இருந்தது.

அப்பு: எப்பவுமே எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதுதானே சந்தை. இந்த மாதிரி பெரிய ஸ்விங்கெல்லாம் அடிக்கடி நடக்காது.

இவ்வளவு ரணகளத்திலேயும் நியுட்ரனுக்கும் ஒரு சில நாள் 2-3 மணி நேரம் வாய்ப்பிருந்துச்சு பாருங்க, அதுதான் சூப்பரான விஷயம்.

நியுட்ரன்: என்னைய கிண்டல் பண்ணலேன்னா பொழுதே போகாது உங்க ரெண்டு பேருக்கும்.

அப்பு: வர்ற வாரத்தில எம்3 பணப்புழக்கம், பணவீக்கம், வங்கிகளில் உள்ள வைப்பு நிதியின் அளவில் வளர்ச்சி, வங்கிகள் வழங்கியுள்ள கடனின் அளவில் வளர்ச்சி, அன்னிய செலாவணி கையிருப்பு, பயணியர் வாகன விற்பனை போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வெளிவர இருக்கின்றன.

சில்லரை விற்பனை, ஏற்றுமதி விலை, இறக்குமதி விலை, வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை, வீடுகள் விற்பனை, பணவீக்கம் போன்ற அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வெளிவர இருக்கின்றன.

நியுட்ரன்: ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களோட காலாண்டு முடிவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன. அவற்றையும் நாம் மனசுல வச்சுக்கணும்.

டவுனு: கடந்த வாரம் பெரிய அளவிலான ஸ்விங் நடைபெற்றதால, இந்த வாரமும் சப்போர்ட் ரெசிஸ்டென்ஸ் சொல்லப் போறதில்லை.

அப்பு: சப்போர்ட் ரெசிஸ்டென்ஸ் சொல்ல வேண்டாம். நிப்டி குறித்து நீங்க டெக்னிக்கலா என்ன எதிர்பார்க்குறீங்கன்னாவது சொல்லுங்க.

டவுனு: இப்போதைக்கு 25,900-க்கு மேலே குளோசிங் நடந்தா, 26,000 - -26,200 வரை சென்று திரும்ப வாய்ப்பு இருக்கு. இறக்கம் வந்தா 25,200-ல் நல்லதொரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருக்கு.

நியுட்ரன்: எப்பதாங்க சந்தை ஒரு சீரான திசையில் பயணிக்க ஆரம்பிக்கும்.

அப்பு: என்னங்க இப்படி கேட்டுட்டீங்க. அது தெரியாம இருக்கறதனால தானே வர்த்தகம் பண்றது சுவாரசியமா இருக்குது.

டவுனு: சீரான திசையினா எப்படீங்க. + /- -- 20 புள்ளிகளுன்னா? அப்படியிருந்தா உங்க கையிலேல்ல சந்தை இருக்கும் நியுட்ரன்.

அப்பு: இந்த வாரம் கொஞ்சம் வாலட்டைலாத்தான் இருக்கும்.

டவுனு: என் பார்வையில அடுத்த வாரம் கடைசியில தான் ஓரளவுக்கு தெளிவு பிறக்கும் போல தோணுது.

நியுட்ரன்: வீட்டுல நிறைய கெஸ்ட். டிபன் செய்ய லேட்டாகுமுன்னு டிபன் சாப்பிடாம வந்துட்டேன். பசிக்குது, வாங்க ஏதாவது டிபன் சாப்பிடலாம்.

நியுட்ரனின் அழைப்பை ஏற்று, ஹோட்டலை நோக்கி மூவரும் கிளம்பினர்.






      Dinamalar
      Follow us