sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ இந்த வாரம் எப்படி இருக்கும் ?

 இந்த வாரம் எப்படி இருக்கும் ?

 இந்த வாரம் எப்படி இருக்கும் ?


ADDED : பிப் 16, 2026 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 01:41 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியுட்ரன்: வாங்க டவுனு. வார கடைசியிலதான் ஒரளவுக்கு தெளிவு பிறக்கும் போல தோணுதுன்னு சொல்லீட்டு போனீங்க.. இறங்குனதை பார்த்தா தெளிவுங்கறதே பயமா இருக்கே.

அப்பு: போன திங்கள்கிழமை ஏறுன வேகத்தை பார்த்து நானும் சரி இனி பெரிய இறக்கம் வராதுன்னு நினைச்சேன். ஆனா கொஞ்சம் கொஞ்சமா ஏற்றத்தோட வேகம் குறைஞ்சு வியாழன் வெள்ளியில பெரிய இறக்கம் வந்துடுச்சு.

நியுட்ரன்: என்னங்க அப்பு ரொம்பவும் உற்சாகமில்லாம பேசுறீங்க.

டவுனு: வேறெப்படி பேசுவாரு. வாங்குன அடி கொஞ்ச நஞ்சமா?

அப்பு: அப்படியெல்லாம் சொல்லாதீங்க. இந்த வருஷ ஆரம்பத்தில இருந்து பார்த்தா, 15 நாள் ஏற்றத்தோடயும் 16 நாள் இறக்கத்தோடயும்தான் நிப்டி நிறைவடைஞ்சிருக்கு. நாள் கணக்குல பெரிய வித்தியாசம் ஒன்னுமில்லை.

நியுட்ரன்: அதோட மட்டுமில்லை. ஜனவரியில இருந்து பார்த்தா மொத்தமா 2,098 புள்ளி ஏற்றமும், 2,262 புள்ளிகள் இறக்கமும் நடந்துருக்கு. புள்ளிகள் கணக்குலேயும் பெரிய வித்தியாசமில்லை.

டவுனு: என்ன நியுட்ரன். அப்புவுக்கு சப்போர்ட்டா கிளம்பீட்டீங்க. நாம, வாரம் எப்படீருந்துச்சு, எப்படியிருக்குமுன்னு பேசறோம். இதில ஜனவரியில இருந்து பார்த்தா, இந்த நுாற்றாண்டு ஆரம்பத்திலேயிருந்து பார்த்தானெல் லாம் பேசப்படாது.

அப்பு: அதுவும் கரெக்ட்தான்.



நியுட்ரன்: பணவீக்கம், பேலன்ஸ் ஆப் டிரேடு, ஹெச்.எஸ்.பி.சி., உற்பத்தி நிறுவனங்களின் கொள்முதல் மேலாளர்கள் மற்றும் சேவை நிறுவனங்களின் கொள்முதல் மேலாளர்கள் குறியீடு போன்ற இந்திய பொருளாதார தரவுகளும், பில்டிங் பெர்மிட்கள், டியுரபிள் குட்ஸ் ஆர்டர்ஸ், இண்டஸ்ட்ரீயல் புரடக்ஷன், பேலன்ஸ் ஆப் டிரேடு, வேலையில்லாத நபர்கள் எண்ணிக்கை, ஜி.டி.பி., வளர்ச்சி, தனிநபர் வரு மானம் மற்றும் செலவுகள் போன்ற அமெரிக்க பொருளாதார தரவுகளும் வரும் வாரத்தில வெளிவர இருக்குது.

டவுனு: இந்த வாரமும் வாராந்திர சப்போர்ட் ரெசிஸ்டென்ஸ் சொல்லப்போறதில்லை.

அப்பு: போன வாரம் ஸ்விங் பெரிசா இல்லையே. 565 புள்ளிகள்தானே. அப்புறம் ஏன் சொல்லமாட்டேங்கிறீங்க.

டவுனு: சொல்லமாட்டேன்னு சொல்லிட்டா விட்டுடனும். ஆராயப்படாது.

நியுட்ரன்: அப்பு ரொம்ப எதிர்பார்க்குறாரு. அதனால என் பார்வையில இருக்கிற டெக்னிக்கல் எல்லைகளை சொல்லீ ட றேன். 25,471-ல குளோசா யிருக்கா. 25,250க்கு கீழே போகாத வரை பெரிய இறக்கத்தை எதிர்பார்க்க முடியாது. மேலே போனா 25,780-க்கு மேலே போக பிரம்ம பிரயத்தனப்பட வேண்டியிருக்கும்.

அப்பு: செய்திகள் சாதகமா இருந்தா மேலே மேலே மேலேன்னு கொண்டு போயிடுவோம்.

டவுனு: முதல்ல செய்தி சாதகமா வரணும். அப் புறமா மேலே போகணும்.

நியுட்ரன்: சபாஷ். சரியான போட்டி.

அப்பு: இந்தக் களேபரத்துல உங்களுக்கு வாய்ப்பேயிருக்காது நியுட்ரன். அதை மறந்துடாதீங்க.

டவுனு: இது ரொம்பவும் சரி.

நியுட்ரன்: என்னைய தாக்குறதுல மட்டும் ஒத்துமையாயிடறாங்கப்பா. அப்ப நான் என்னதான் பண்றது.

அப்பு: வேடிக்கை பார்க்கறதுதான்.

டவுனு: அதுவும் ஒரு ஓரமா இருந்து மட்டும். இல்லாட்டி சட்டை கிழிஞ்சிடும்.

அப்பு: வீட்டுல சாமி கும்பிடறோம். மதியம் தடபுடல் சமையல்.

என்னோட விருந்து சாப்பிட வாங்க. சாப்பிட்டுவிட்டு உங்களை கொண்டு வந்து இங்கேயே விட்டுடறேன் என அழைக்க, இருவரும் அப்புவின் காரில் ஏறி கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us