sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

/

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?


ADDED : மார் 02, 2026 02:21 AM

Google News

ADDED : மார் 02, 2026 02:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியுட்ரன்: என்னங்க டவுனு ஒரு ஸ்டேஜூக்கு மேலே எங்ககிட்ட பேச்சு கிடையாதுன்னு சொல்லீட்டு போனீங்க. போன வாரம் 392 புள்ளிகளை இறக்கி விட்டுட்டீங்களே.

அப்பு: அதுலயும் கடந்த செவ்வாய்கிழமை நடந்தது கொஞ்சமும் நாங்க எதிர்பார்க்காத ஒன்னு டவுனு.

நியுட்ரன்: ஆமாங்க. திங்கள்கிழமை நிலைமையை பார்த்தா செவ்வாய்க்கிழமை வாணவேடிக்கை இருக்குமுன்னு நினைச்சேன். ஆனா செவ்வாய்கிழமை அன்னைக்கு திங்கள்கிழமையை விட டபுளா இறக்கீட்டீங்க.

டவுனு எப்பவுமே நான் சொல்றதுதான். வாய்ப்பு கிடைச்சா உபயோகிச்சிக்கிடணும்.

அப்பு: வர்ற வாரம் செய்திகள் வேற பயமுறுத்துது. உங்க காட்டுல மழைதான் டவுனு.

நியுட்ரன்: மழையோ வெயிலோ பெரிய பாதிப்பு இல்லாம இருந்தா சரி.

டவுனு: வர்ற வாரத்துல ஹெச்.எஸ்.பி.சி., மேனுபேக்சரிங் பி.எம்.ஐ., மற்றும் சர்விசஸ் பி.எம்.ஐ., இண்டஸ்ட்ரீயல் புரொடக்ஷன், மேனுபேக்சரிங் புரொடக்ஷன், அந்நிய செலவாணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதார தரவுகள் வெளிவர இருக்கு. ஐ.எஸ்.எம்., மேனுபேக்சரிங் பி.எம்.ஐ., - ஐ.எஸ்.எம்., சர்விசஸ் பி.எம்.ஐ., வேலையில்லாத நபர்கள் எண்ணிக்கை, ரீடெயில் சேல்ஸ் போன்ற அமெரிக்க பொருளாதார தரவுகள் வெளிவர இருக்குது.

அப்பு: இந்த வாரம் செவ்வாய் கிழமை சந்தைக்கு விடுமுறை.

நியுட்ரன்: ஓ! லீவு வேற இருக்குதா. அப்ப நிச்சயமா எனக்கு வாய்ப்பே இருக்காது.

டவுனு: வாராந்திர சப்போர்ட் 24,950 / 24,730 / 24,490லேயும் ரெசிஸ்டென்ஸ் 25,510 / 25,690 / 25810லேயும் இருக்குது.

அப்பு: பொதுவா பெரிய ஏற்ற இறக்கத்தை சந்திச்சிருந்தாலோ சந்தையை ரொம்பவும் பாதிக்கிற அளவிலான முக்கிய செய்திகள் இருந்தாலோ சப்போர்ட் ரெசிஸ்டென்ஸ் சொல்ல மாட்டீங்களே. இன்னைக்கு சொல்லீட்டீங்க.

டவுனு: அப்படியில்லீங்க அப்பு. இது மாதிரி ரொம்ப கணிக்க முடியாத நிலைமை இருக்கறப்போ டெக்னிக்கல் லெவல்கள் பொய்யாகிப்போய்விட அதிக அளவில வாய்ப்பிருந்தாலும் அது என்னன்னு தெரிஞ்சு வச்சுக்கிறது நல்லது.

நியுட்ரன்: எப்பவுமே போர் மாதிரி நிச்சயமற்ற சூழ்நிலையில நாம சந்தை இப்படிப்போகுமுன்னு நினைச்சா அது ரியாக்ஷனே கொடுக்காமலோ அல்லது ரியாக்ஷன் கொடுத்துட்டு உடனடியா நார்மலாகிடவோ செய்துடும்.

அப்பு: கரெக்டா சொன்னீங்க நியுட்ரன். போர் மாதிரி நிகழ்வுகளிலே திடீர் திடீருன்னு புதிய தகவல்கள் வந்து சந்தையின் போக்கை மாத்தீடும். ஆனாலும் எனக்கென்னவோ இந்த முறை நிலைமையை கணிப்பது ரொம்ப சிரமமா இருக்குமுன்னு தோணுது.

டவுனு: கரெக்ட்தான். சந்தையில் ரியாக்ஷன் ரொம்ப வேகமா வந்துட்டு போயிடுது. சமீப காலமா பல விஷயங்களில் இது நிறைய தடவை நடந்துருக்கு.

அப்பு: அப்ப இறுதியா என்னதான் சொல்ல வர்றீங்க.

டவுனு: செய்திகள் மேல கண்கொத்திப்பாம்பா இருங்க. நியுட்ரன் உங்களுக்கு ஒருவாரம் லீவு சேங்ஷன் பண்ணியாச்சு. எங்கேயாவது டூர் போறதுன்னா போயிட்டுவாங்க.

நியுட்ரன்: இருக்கு. எனக்கு நம்பிக்கை இருக்கு. நீங்க தர்ற லீவு எனக்கு வேணாம். நாளின் ஓப்பனிங்கிலேயே சம்பவம் நடந்து நாள் பூரா ஆடாம அசையாம என் கையில சந்தை இருந்துடறதுக்கு அதிக வாய்ப்பிருக்கு.

அப்பு: பார்க்கத்தானே போறோம். சரி வாங்க. தர்பூசணி ஜீஸ் குடிக்கலாம் என ஜீஸ் கடையை நோக்கி அப்பு நகர இருவரும் பின்தொடர்ந்தனர்.






      Dinamalar
      Follow us