தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?


ADDED : மார் 09, 2026 12:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 12:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியுட்ரன்: அப்பு, டவுனு நீங்க ரெண்டுபேரும் போன வாரம் நடக்க வாய்ப்பிருக்குன்னு பேசின விஷயம் அத்தனையும் நடந்ததை நான் என் கண்ணால பார்த்தேன். திடீர் திடீருன்னு ஏறுது இறங்குது. பயமா இருக்குதுங்க.

அப்பு: இதுக்குத்தான் டவுனு உங்களுக்கு ஒருவாரம் லீவு சேங்ஷன் பண்ணி ஊருக்கு போகச்சொன்னார். வர்ற வாரமும் உங்களுக்கு லீவு தரலாம். அப்படித்தான் இருக்கு நிலைமை.

நியுட்ரன்: போன வாரத்துல மட்டும் நிப்டி 728 புள்ளிகள் சரிஞ்சிடுச்சு. போர் அப்படீன்னா சந்தையில பயம் வருமுன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா இப்பத்தான் பார்க்குறேன்.

டவுனு: என்னமோ எனக்கு அனுபவம் அதிகமுன்னு சவடால் விட்ட மாதிரி இருந்துச்சு.

அப்பு: போர்ல என் னங்க அனுபவம். காலாட்படை, குதிரைப்படை, பீரங்கி, விமானப்படைன்னு இருந்த காலம் போய் டிரோன் படைன்னு மாற்றம் வந்துடுச்சு. காலம் மாறுது. சந்தையை பொறுத்தவரை அனுபவம் பயத்தை குறைக்கலாமே தவிர பயமே இல்லாம இருக்க வைக்காது.

நியுட்ரன்: சரியா சொன்னீங்க. நிமிஷத்துக்கு நிமிஷம் தகவல் வர்ற டிஜிட்டல் உலகத்திலேயே இப்படி இருக்கே அந்தக்காலத்துல எப்படி இருந்திருக்கும்.

டவுனு: ஐயா அனுபவஸ்தரே முதல் உலகப்போர் நடக்கறப்ப சந்தையில நடந்த விஷயங்களை கேட்டா நடுங்கீடுவீங்க. சொல்லட்டா?

நியுட்ரன்: அதை விடுங்க. வர்ற வாரத்துல 'எம்3' பணப்புழக்கம், பணவீக்கம், வங்கிகள் வழங்கிய கடனின் அளவு மற்றும் வங்கிகளில் உள்ள வைப்பு நிதியின் அளவில் வளர்ச்சி, பயணியர் வாகன விற்பனை போன்ற இந்திய பொருளாதார தரவுகள் வெளிவர இருக்கு.

வீடுகள் விற்பனை, பணவீக்கம், கட்டிடம் கட்ட வழங்கப்பட்ட அனுமதிகள், வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை, டியுரபிள் குட்ஸ் ஆர்டர்ஸ், ஜிடிபி, தனி நபர் வருமானம் மற்றும் செலவுகள் மிச்சிகன் நுகர்வோர் மனநிலை போன்ற அமெரிக்க பொருளாதார தரவுகள் வெளிவர இருக்குது.

டவுனு: சப்ஜெக்ட்டை மாத்துறதுல கில்லாடிங்க நீங்க.



அப்பு; இந்த வாரம் நிப்டியோட டெக்னிக்கல் சப்போர்ட் 24175/23900/23625 போன்ற லெவல்களிலேயும், ரெசிஸ்டென்ஸ் 24850/25260/25520 போன்ற லெவல்களிலேயும் இருக்குது.

நியுட்ரன்: என்ன சப்போர்ட்டோ என்ன ரெசிஸ்டென்ஸோ. போங்க சார்.



டவுனு: சலிச்சுக்காதீங்க நியுட்ரன். இந்த மாதிரி சூழ்நிலையில இதை தெரிஞ்சு வைச்சுக்கிறது நல்ல விஷயம்தான்.

நியுட்ரன்: ஏற்ற இறக்கம் ரொம்ப அதிகமா இருக்கறதால டெக்னிக்கல் அனாலிசிஸ் காட்டுறது ஒன்னு நடக்கறது ஒன்னால இருக்குது.

அப்பு: நடக்கறது போர். அதுல நிச்சயம் சொல்றது ஒன்னு செய்யறது ஒன்னாத்தான் இருக்கும். சந்தையும் அதுக்கு ஏத்த மாதி ரிதான் ரியாக்ட் பண்ணும்.

டவுனு: எதையுமே அனுமானம் பண்ண முடியாத சூழலில டெக்னிக்கல்கள் ஒர்க் அவுட் ஆகாது நியு ட்ரன். ஆனா சட்டுன்னு சந்தையில தெளிவு வந்துடுச்சுன்னா அப்புறம் டெக்னிக்கல்கள் ஓரளவுக்கு வொர்க் அவுட் ஆக ஆரம்பிச்சுடும்.

நியுட்ரன்: அப்ப இந்த வாரம் தெளிவு பிறந்துடுமுன்னு சொல்ல வர்றீங்களா?

டவுனு: எகத்தாளம் பேசறதுல உங்களை அடிச்சுக்க முடியாது நியுட்ரன். அனுமானமே பண்ண முடியாதுங்கறேன். அப்புறம் தெளிவு பிறந்திடுமான் னா என்ன அர்த்தம்.

நியுட்ரன்: ஒரு ஆர்வத்துல கேட்டுட்டேன். மனிச்சுக்கிடுங்க.

அப்பு: இதுக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. நேரடியா அபராதம்தான். வாங்க உங்க செலவுல டிபன் சாப்பிடலாம்.

நியுட்ரன்: தாராளமா போகலாம் என்று சொல்ல மூவரும் ஹோட்டலை நோக்கி நடந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us