தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?


ADDED : மார் 30, 2026 03:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 03:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டவுனு: வாங்க அப்பு. ரொம்பவும் முயற்சி செய்யறீங்க. ஆனா பாவம், ஜான் ஏறுனா முழம் சறுக்குது.

அப்பு: மாத்தி சொல்றீங்க. முதல்ல முழம் சறுக்குது, அப்புறம்தான் ஜான் ஏறுது.

நியுட்ரன்: ஹா ஹா ஹா!

டவுனு: என்ன எகத்தாள சிரிப்பு?

நியுட்ரன்: இல்லை. போன வாரத்துக்கு முந்துன வாரம் ஜான் ஏறி முழம் சறுக்குச்சு. போன வாரம் முழம் சறுக்கி ஜான் ஏறுச்சு. இதுல நிகர விளைவு என்னன்னா, போன வாரம் 294 புள்ளிகள் இறக்கம். கடந்த இரண்டு வாரத்துலயும் சேர்த்து நிகர அளவில் 331 புள்ளிகள் இறக்கம். இதுக்கு இடையில நீங்க கொடுக்கற அலப்பறையை நினைச்சேன், சிரிச்சேன்.

அப்பு: சந்தையை ஒரு ஓரமா நின்னு வேடிக்கை பார்க்கறவங்கெல்லாம் எகத்தாளம் பண்ற மாதிரியாயிடுச்சு என் நிலைமை. நான் 'ஹர்ட்' ஆயிட்டேன்.

டவுனு: போர் அப்படின்னாலே ஏற்ற இறக்கம் அதிகமாத்தான் இருக்கும். அதுல உங்க சைடுல கொஞ்சம் அதிகமா சேதாரம் வரத்தான் செய்யும். போர் முடிஞ்சிடுச்சுன்னா எனக்கும் நியூட்ரனுக்கும் வித்தியாசமே இல்லாம போயிடும். அப்புறம் கொஞ்ச காலம் உங்க ராஜ்யம்தான்.

நியுட்ரன்: முடிஞ்சிடுச்சுன்னா என்ன, முடியற மாதிரி சிக்னல்கள் தெரிஞ்சாலே போதும்.

டவுனு: கரெக்டா சொன்னீங்க.

அப்பு: இண்டஸ்ட்ரியல் ப்ரொடக் ஷன், மேனுபேக்சரிங் ப்ரொடக் ஷன், ஹெச்.எஸ்.பி.சி., மேனுபேக்சரிங் பி.எம்.ஐ., வங்கிகள் வழங்கியுள்ள கடன் மற்றும் அவற்றில் இருக்கும் வைப்புநிதியின் அளவில் வளர்ச்சி, அந்நிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வர்ற வாரம் வெளியாக இருக்கு. எஸ் அண்டு பி கேஸ்-ஷில்லர் வீட்டு விலை நிலவரம், ஜே.ஓ.எல்.டி.எஸ்., ஜாப் ஓப்பனிங்ஸ், ரீடைல் சேல்ஸ், ஐ.எஸ்.எம் மேனுபேக்சரிங் மற்றும் சர்வீசஸ் பி.எம்.ஐ., ஜாப்லெஸ் கிளைம்ஸ், அன்-எம்ப்ளாய்மென்ட் ரேட் போன்ற அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வர்ற வாரம் வெளியாக இருக்கு. மார்ச் மாத எப் அண்டு ஓ எக்ஸ்பைரியும் இருக்குது.

நியுட்ரன்: வர்ற வாரம் இரண்டு நாள் சந்தைக்கு விடுமுறையும் இருக்குது.

டவுனு: ஸ்கூல் பையன போல சந்தோஷத்த பாருங்க.

அப்பு: நியூட்ரன், சந்தை இருந்தா என்ன இல்லாட்டி என்ன? நீங்க பார்க்க போறதோ வேடிக்கை.

நியுட்ரன்: நீங்களுமா மகாப்பிரபு!

அப்பு: இந்த வாரம் சப்போர்ட், ரெசிஸ்டன்ஸ் சொல்ல போறதில்லை. ஏன்னா விடுமுறை, எப் அண்டு ஓ எக்ஸ்பைரி, போர் நிலைமைன்னு நிறைய வேரியபிள்கள் இருக்கறதால டெக்னிக்கல்கள் ஒர்க் அவுட் ஆகறதுக்கு வாய்ப்பு மிக மிக குறைவு.

டவுனு: கரெக்டான முடிவு.

நியுட்ரன்: கிண்டல் பண்ணாம வரும் வாரம் என்ன எதிர்பார்ப்புன்னு சொன்னீங்கன்னா நான் மனசுல வச்சுக்குவேன்.

டவுனு: ஓ! அப்ப நியூட்ரன் இந்த வாரம் சந்தையில கலக்கப் போறார்.

நியுட்ரன்: கிண்டல் கூடாதுன்னேன்.

அப்பு: இந்த வாரம் எப்படியிருக்கும்னு குத்துமதிப்பாகூட கணிக்கிறது ரொம்ப சிரமம். விடுமுறைகள் இருக்கறதால, அது முடிஞ்சவுடனேயே அதுக்கு முதல் நாள் வந்த செய்திகள் மற்றும் அதற்கு உலக் சந்தைகள் கொடுத்த ரியாக்ஷன் போன்றவற்றிற்கு ஏற்ற மாதிரி இங்க ரியாக்ட் ஆகும்.



நியுட்ரன்: அப்ப இந்த வாரமும் வேடிக்கைதானா!

அப்பு: ஓ, அப்ப மத்த வாரங்கள்ல எல்லாம் ரொம்ப ஆக்டிவா இருப்பீங்களோ!

நியுட்ரன்: நான் உங்களை சொன்னேன்.

அப்பு: என்னை கலாய்ச்சுட்டீங்கல்ல, இன்னைக்கு லஞ்ச் நீங்கதான் ஸ்பான்சர்.

நியுட்ரன்: தாராளமா பண்ணிடலாம்.

டவுனு: வாங்க ஒரு ஸ்பெஷல் மீல்ஸ் சாப்பிடலாம்... என்று சொல்ல, மூவரும் ரெஸ்டாரன்ட்டை நோக்கி நடந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us