sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 08, 2026 ,பங்குனி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

/

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?


ADDED : ஏப் 06, 2026 01:45 AM

Google News

ADDED : ஏப் 06, 2026 01:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அப்பு: டவுனு நீங்க சொன்ன மாதிரி போனவாரம் ஒரு கணிப்பும் ஒர்க் அவுட் ஆகலியே. மூன்று நாள் வர்த்தகத்துல முன்னே போனா முட்டுது. பின்னே போனா உதைக்குதுன்னு ஒரே களேபரமால்ல இருந்துடுச்சு

டவுனு: சரியாச்சொன்னீங்க. வியாழக்கிழமை நானே கொஞ்சம் கையை சுட்டுக்கிட்டேன்னா பார்த்துக்குங்க

அப்பு: என்ன நியுட்ரன் மெளன விரதமா!

நியுட்ரன்: அப்படித்தான் வச்சுக்குங்களேன்

டவுனு: ரொம்ப சேதாரமோ!

நியுட்ரன்: லைட்டா!

அப்பு: எப்பத்தாங்க நிலைமை சீரடையும்

டவுனு: அதை கண்டுபிடிக்க முடியுமா என்ன?

நியுட்ரன்: வர்ற வாரத்துல ஹெச்.எஸ்.பி.சி., சேவை நிறுவனங்களின் கொள்முதல் மேலாளர்கள் குறியீடு, இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவுகள், எம்3 பணப்புழக்கம், அந்நிய செலவாணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வெளிவர இருக்குது. ஐ.எஸ்.எம்., சேவை நிறுவனங்களின் கொள்முதல் மேலாளர்கள் குறியீடு, டியுரபிள் குட்ஸ் ஆர்டர் நிலவரம், ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம், தனிநபர் வருமானம், தனிநபர் செலவுகள், பணவீக்கம், மிச்சிகன் நுகர்வோர் மனநிலை போன்ற அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வெளிவர இருக்குது

டவுனு: இந்த வாரம் நீங்களே சொல்லீட்டீங்களா!

அப்பு: ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவுகள் வெளிவர இருக்குது. இது ஒரு முக்கியமான நிகழ்வு

நியுட்ரன்: வர்ற வாரம் விடுமுறை ஏதும் இருக்குதா?

டவுனு: விடுமுறை ஏதும் இல்லை. ஆனா உங்களுக்கு வர்ற வாரம் லீவு சேங்ஷன் பண்ணியாச்சு நியுட்ரன். சொந்த ஊருக்கு போய் ரெஸ்ட் எடுங்க

அப்பு: அப்ப சந்தை இந்த வாரம் தடதடக்குமுன்னு எதிர்பார்க்கறீங்களா டவுனு. பெருசா எதுவும் நடந்துடுமோ!

டவுனு: கடந்த சில வாரத்துல இருந்ததை விடவா தடதடக்கப்போகுது. நியுட்ரனுக்கு வாய்ப்பே இருக்காதுங்கறதை அப்படி சொன்னேன்

நியுட்ரன்: இந்த வார கலாய்த்தல் கோட்டா ஓவர்

அப்பு: வர்ற வாரம் நிப்டி வாராந்திர அளவில் 22283/21854/21564 போன்ற லெவல்களை சப்போர்ட்டாகவும், 23042/23371/23661 போன்ற லெவல்களை ரெசிஸ்டென்ஸாவும் கொண்டு செயல்பட வாய்ப்பிருக்கு

டவுனு: இன்னுமா சப்போர்ட் ரெசிஸ்டென்ஸை எல்லாம் நம்புது இந்த உலகம்

நியுட்ரன்: புல் மார்க்கெட்டுக்கு ரெசிஸ்டென்ஸ் கிடையாது, பியர் மார்க்கெட்டுக்கு சப்போர்ட் கிடையாதுன்னு என் நண்பர் ஒருத்தரு விளையாட்டா சொல்வாரு

டவுனு: அது என்னவோ உண்மைதான்



நியுட்ரன்: பெரிய மாற்றங்கள் ஏற்படாம தட்டையா இருக்கற மார்க்கெட்டுக்கு இந்த இரண்டுமே கிடையாது

அப்பு: என்ன நியுட்ரன் சேம்சைடு கோல் போடறீங்க

நியுட்ரன்: உண்மையை சொன்னேங்க

அப்பு: ஏறுர சந்தை இறங்குற சந்தைங்குறதெல்லாம் ஓ.கே. காளைகளுக்கோ அல்லது கரடிகளுக்கோ வாய்ப்பு கிடைக்கும். ஆனா இந்த தட்டையா இருக்குற சந்தை எல்லாரையும் படுத்தி எடுத்துடும். அந்த நிலைமை மட்டும் வந்துடக்கூடாது. கொஞ்ச நாள் இருந்தாலும் எல்லாரையும் வெறுப்பேத்திடும் அது

டவுனு: அதுக்கான வாய்ப்பு இப்போதைக்கு இருக்கற மாதிரி தெரியலீங்க

அப்பு: நியுட்ரன் கடைசியா எப்ப அது மாதிரி இருந்துச்சு

நியுட்ரன்: ரொம்ப வருஷம் ஆச்சு. எனக்கே மறந்துடுச்சுங்க

டவுனு: உங்க மறதிக்கு ஒரு அபராதம் போடுவோம். வெயில் அதிகமா இருக்கு. ஜுஸ் வாங்கி கொடுங்க என்று டவுன் சொல்ல மூவரும் ஜுஸ் குடிக்க கிளம்பினர்.






      Dinamalar
      Follow us