sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 21, 2026 ,சித்திரை 8, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

/

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?


ADDED : ஏப் 20, 2026 01:58 AM

Google News

ADDED : ஏப் 20, 2026 01:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அப்பு: வணக்கம் டவுனு. நீங்க சொன்ன மாதிரி இரண்டு நாள் இறக்கம் வாராந்திர அளவில ஏற்றமுங்குற இரண்டுமே போன வாரம் நடந்துடுச்சே. நல்ல கணிப்புதான் போங்க.

நியுட்ரன்: ஒரு நாளும் எனக்குத்தான் வாய்ப்பில்லாம போயிடுச்சு.

டவுனு: நல்ல கணிப்புன்னு சொல்லாதீங்க. ஏதோ ஏதேச்சையா அமைஞ்சுடுச்சு.

நியுட்ரன்: என்ன ஒரு தன்னடக்கம்.

அப்பு: பிப்ரவரி 27ம் தேதி நிலைமையில இருந்து நிப்டி அதிகபட்சமா 21 சதவீதம் இறங்குச்சு. இப்ப வரைக்கும் 18 சதவீதம் ஏறிடுச்சு. மீதமிருக்கற 3 சதவீதம் இந்த வாரம் ஏறிடுமா?

டவுனு: இந்த மாதிரி மனக்கணக்கு போடாதீங்க. நடந்துட்டு இருக்குறது போர். இப்போதைக்கு நிறுத்திவைப்பு அவ்வளவுதான். எப்பவேண்டுமென்றாலும் பிரச்னை உருவாகலாம்.

நியுட்ரன்: கரெக்ட்டா சொன்னீங்க.

டவுனு: மீதமிருக்கின்ற 3 சதவீதம் ஏற்றம் வந்துட்டாலுமே போர் நிறைவுபெறுகின்றவரை எதையும் உறுதியா சொல்ல முடியாது.

நியுட்ரன்: வர்ற வாரம் இருக்குற பொருளாதார தரவுகளை சொல்லுங்க.

டவுனு: ஹெச்.எஸ்.பி.சி., மேனுபேசரிங் பி.எம்.ஐ., - ஹெச்.எஸ்.பி.சி., சர்வீசஸ் பி.எம்.ஐ., அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வெளிவர இருக்குது. ரீட்டெயில் சேல்ஸ், வீடுகள் விற்பனை, வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை, எஸ் அண்டு பி குளோபல் மேனுபேக்சரிங் பி.எம்.ஐ., எஸ் அண்டு பி குளோபல் சர்வீசஸ் பி.எம்.ஐ., மிச்சிகன் கன்ஸ்யூமர் செண்டிமென்ட் போன்ற அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தகவல்கள் வெளிவர இருக்குது.

அப்பு: பெரிய அளவிலான பொருளாதார தரவுகள் ஏதுமில்லாத வாரமா இருக்குது.

டவுனு: உங்களுக்கு போரடிக்காம இருக்க போர் குறித்த தகவல்கள்தான் வந்துகிட்டே இருக்குமுல்ல.

அப்பு: ஆனா அதெல்லாம் திடுக்கிடும் வகையால்ல இருக்குது.

நியுட்ரன்: அப்பு நீங்க சொல்லுங்க, வர்ற வாரம் குறித்த உங்க கணிப்பு என்ன?

அப்பு: ஏற்ற இறக்கங்கள் அதிகமா இருக்க வாய்ப்பிருக்குது. அதைத்தவிர வேறு எதுவும் எனக்கு தெரியல.

நியுட்ரன்: டெக்னிக்கலா 23,800/23,250/22,935 போன்ற லெவல்களில வாராந்திர சப்போர்ட்டும், 24,650/24,950/25,275 போன்ற லெவல்களில வாராந்திர ரெசிஸ்டென்ஸும் இருக்குது.

அப்பு: இப்பத்தான் 24,350தே வந்துருக்கு. அதுக்குள்ளாற 25,275 ரெசிஸ்டென்ஸ்ங்குறீங்க.

டவுனு: அவரு என்ன செய்வாரு. கடந்துவந்த அதிக ஏற்ற இறக்கத்துனால சப்போர்ட் ரெசிஸ்டென்ஸ் ரொம்பவும் தள்ளிதள்ளி போயிடுது.

அப்பு: டவுனு உங்க கணிப்பை சொல்லுங்க. வர்ற வாரம் எப்படி இருக்கும்.

நியுட்ரன்: இது என்ன புதுப்பழக்கம். வாரா வாரம் யாரவது ஒருத்தர் தானே சொல்லுவோம்.

டவுனு: ரொம்ப ஆசைப்படுறாரு. சொல்லீடறேன். வாராந்திர ரீதியா இறக்கம் வர்றதுக்கு உண்டான வாய்ப்பு இருக்கு.

நியுட்ரன்: பயங்காட்டாதீங்க டவுனு. இப்பத்தான் தெளிஞ்சிருக்கோம்.

அப்பு: தெளிய வச்சு அடிக்கப்படாதா என்ன?

டவுன்: சூழ்நிலை குழப்பமா இருக்கறதால டெக்னிக்கல்கள் வொர்க் அவுட் ஆகாம போயிடவும் வாய்ப்பிருக்கு.

அப்பு: இது சொன்னீங்களே இதுதான் பெர்பெக்ட்டான ஒன்னு.

டவுன்: சந்தை எப்படி உங்களையே என் கருத்துக்கு சப்போர்ட் பண்ண வச்சுடுச்சு பார்த்தீங்களா!

நியுட்ரன்: எனக்குத்தான் சப்போர்ட்டே கிடையாது.

டவுனு: கிடையவே கிடையாதுன்னு சொன்னா சரியா இருக்கும்.

நியுட்ரன்: வாய் நிறைய வாழ்த்தியதற்கு நன்றி. வெயில் அதிகமா இருக்கு. வாங்க இளநீர் குடிக்கலாம் என நியுட்ரன் கூப்பிட, இருவரும் இளநீர் கடையை நோக்கி சென்றனர்.






      Dinamalar
      Follow us