sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 27, 2026 ,சித்திரை 14, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

/

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?

 இந்த வாரம் எப்படி இருக்கும்?


ADDED : ஏப் 27, 2026 01:18 AM

Google News

ADDED : ஏப் 27, 2026 01:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியுட்ரன்: வாராந்திர ரீதியா இறக்கம் வர்றதுக்கு உண்டான வாய்ப்பு இருக்குன்னு சொல்லீட்டு போனீங்க. இவ்வளவு இறக்குவீங்கன்னு எதிர்பார்க்கல டவுனு.

டவுனு: நான் மட்டுமா சொன்னேன். அப்பு கூட எனக்கு சப்போர்ட் பண்ணுனாரு. திங்கள் கிழமை உங்களுக்கு கூட வாய்ப்பு இருந்துச்சே நியுட்ரன்.

நியுட்ரன்: அதென்ன உங்களுக்கு கூட!

அப்பு: ஆரம்பத்திலேயே சண்டை கட்டாதீங்க. ஆக வேண்டியதை பேசுவோம்.

நியுட்ரன்: வர்ற வாரத்துல இண்டஸ்ட்ரியல் புரொடக்ஷன், மேனுபேக்சரிங் புரொடக்ஷன், எம்3 பணப்புழக்கம், வங்கிகளில் உள்ள டிபாசிட் மற்றும் வழங்கிய கடனின் அளவில் வளர்ச்சி, அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வெளிவர இருக்குது.

பில்டிங் பெர்மிட்கள், டியுரபிள் குட்ஸ் ஆர்டர்கள், அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி விகித முடிவுகள், பெர்சனல் கன்சம்ஷன் - எக்ஸ்பென்டிச்சர் ப்ரைஸ் இண்டெக்ஸ், ஐ.எஸ்.எம்., உற்பத்தி நிறுவனங்களின் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு போன்ற அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வெளிவர இருக்குது.

டவுனு: என்.எஸ்.இ.,ல ஏப்ரல் மாத எப் அண்டு ஓ எக்ஸ்பைரி வர்ற வாரம் நடக்க இருக்குது.

அப்பு: ஒரு நாள் விடுமுறையும் இருக்குது.

டவுனு: எப் அண்டு ஓ எக்ஸ்பைரியும், அமெரிக்க வட்டி விகித முடிவுகளும் இருக்கறதால இறக்க ஏற்றத்துக்கு பஞ்சமிருக்காது.

நியுட்ரன்: அது என்னங்க இறக்க - ஏற்றம். ஏற்ற இறக்கம் அப்படீங்கறதுதானே பேச்சு வழக்கு.

டவுனு: பெரியவங்க மாத்தி சொன்னது புரியலையின்னா அமைதியா இருந்துக்கணும். கேள்வி கேட்கப்படாது.

நியுட்ரன்: 23,607/23,316/23,015 போன்ற லெவல்களிலே வாராந்திர சப்போர்ட்டும், 24,395/24,892/25,194 போன்ற லெவல்களிலே வாராந்திர ரெசிஸ்டென்சும் இருக்க வாய்ப்பிருக்கு.

அப்பு: வாலட்டைலிட்டி அதிகமானதால சப்போர்ட் ரெசிஸ்டென்ஸ் ரொம்பவும் தள்ளித்தள்ளி இருக்குது. டவுனு வர்ற வாரம் குறித்த உங்க கணிப்பு என்ன?

டவுனு: நான் சொன்னா சரியா வராதுங்க. நியுட்ரனிடம் கேட்போம்.

நியுட்ரன்: வாலட்டைலிட்டிக்கு பஞ்சமிருக்காது. எப் அண்டு ஓ எக்ஸ்பைரிக்கு அப்புறம் டிரெண்ட் மாறலாம்.

பிப்ரவரி 27ம் தேதியில் இருந்து கணக்கெடுத்து பார்த்தா, ஒரு வாரம் மிகப்பெரிய இறக்கமும் அதே மாதிரி ஒரு வாரம் மிகப்பெரிய ஏற்றமும் நடந்துச்சு. அந்த மாதிரியான வாரமா வர்ற வாரம் இருந்திடுமோன்னு பயமா இருக்குது.

அப்பு: ஒரு வாரம் என்பதெல்லாம் சரி. ஏறுமா? இறங்குமா?

நியுட்ரன்: அதுதாங்க தெரியலை.

அப்பு: டவுனு இவரை போய் கேட்கலாமுன்னீங்களே நீங்களே சொல்லீடுங்களேன்.

டவுனு: வாரந்திர ரீதியா இறக்கம் வரத்தான் வாய்ப்பு இருக்கு. நியுட்ரன் பயப்படற அளவுக்கு, இல்லையில்லை பயமுறுத்தர அளவுக்கு இருக்குமான்னு கணிக்க முடியலை.

நியுட்ரன்: மறுபடியும் இறக்கமா?

அப்பு: இதுல என்ன ஆச்சரியப்பட இருக்குது?

டவுனு: ரெண்டு வாரமா நீங்க சரியில்லை அப்பு. தெரிஞ்சோ தெரியாமலோ எனக்கே சப்போர்ட் பண்றீங்க.

அப்பு: தெரிஞ்சேதான் சப்போர்ட் பண்றேன்னு வச்சுக்குங்களேன்.

நியுட்ரன்: அப்ப என்னோட கதி.

டவுனு: கவலைப்படாதீங்க. இந்த வாரம் உங்களுக்கு வாய்ப்பிருக்கும்.

நியுட்ரன்: ஐ! நினைச்சாலே சந்தோஷமா இருக்குது.

டவுனு: ஒரு நாள் ஓப்பனிங்கிலே எக்கச்சக்கமா இறங்கி நாளின் கடைசிவரை அதே லெவல்ல இருந்தா அது உங்களுக்கான வாய்ப்புதானே நியுட்ரன்.

நியுட்ரன்: விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதீங்க. கொஞ்சம் வியாபாரம் பண்ற மாதிரி சந்தை வாய்ப்பளிக்கட்டும்.

அப்பு: வியாபாரத்துக்கெல்லாம் வாய்ப்பிருக்கும். லாபத்துக்கு வாய்ப்பிருக்குறதுதான் முக்கியம்.

டவுனு: ரெண்டு பேரும் ரொம்ப கலங்கிப்போயிருக்கீங்க. வாங்க சூடா ஒரு காபி சாப்பிடலாம். கொஞ்சம் தெம்பு வரும்.

பேசிக்கொண்டே மூவரும் காபி ஷாப்பை நோக்கி நடந்தனர்.






      Dinamalar
      Follow us